நீண்ட தலைமுடிக்கு ஏற்ற அசத்தலான பிரைடல் ஹேர் ஸ்டைல்!

அடர்த்தியான, நீளமான அழகான ப்ரைடல் ஹேர் ஸ்டைல் செய்துகாட்டுகிறார் அழகுக்கலை நிபுணர். இந்த ஹேர் ஸ்டைல் செய்யும்போது தலைமுடி சிக்கில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் இந்த ஹேர்ஸ்டைல் செய்யும்போது கை மற்றும் விரல்களில் க்ரிப் மிகவும் அவசியம்.

Update:2024-11-05 00:00 IST
Click the Play button to listen to article

திருமணம் மற்றும் விஷேச நாட்களில் பெண்கள் ஹேர் ஸ்டைல் செய்யும்போது பிடித்தமான மற்றும் நேர்த்தியான ஹேர் ஸ்டைலை கொண்டுவர ஹேர் எக்ஸ்டன்ஷன்களை பயன்படுத்துவதுண்டு. அதனால் இயற்கையாகவே நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தல் கொண்டவர்களுக்கு அதை வைத்தே எளிதில் சூப்பரான ஹேர் ஸ்டைல் செய்துவிடலாம் என பலர் நினைப்பார்கள். ஆனால் நீளமான மற்றும் அடர்த்தியான முடி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாலும் அதை பராமரிப்பதும் அதில் ஸ்டைல் செய்வதும் மிகவும் சிரமம் என்கிறார் அழகுக்கலை நிபுணர் லலிதா. குறிப்பாக இந்த முடியில் பிரைடல் ஹேர் ஸ்டைல் செய்வது மிகவும் கடினம் என்று சொல்லும் இவர், அடர்த்தியான, நீளமான முடியிலும் அழகான பிரைடல் ஹேர் ஸ்டைல் செய்து காட்டுகிறார்.

முதலில் முன்பக்க முடியை கொஞ்சம் க்ரிம்ப் செய்யவேண்டும். கீழ்முடியில் சீரம் தடவவேண்டும். பிறகு முன்பக்க முடியின் மேற்பகுதியில் பக்கவாட்டிலிருந்து இரண்டு பகுதிகளை பிரித்து எடுத்து பின் செய்துவிட வேண்டும்.


போனிடெய்ல் போட்டு ஹேர் ஸ்டைலுக்கு ஏற்றவாறு முடியை இரண்டு பகுதிகளாக பிரித்தல்

மீதமுள்ள முடியை நன்றாக சீவி, மேற்பகுதியில் மூஸ் அப்ளை செய்து, சிறிய ரப்பர் பேண்டு பயன்படுத்தி போனிடெய்ல் போடவேண்டும். அந்த முடியை மேல் கீழாக இரண்டு பகுதிகளாக பிரிக்கவேண்டும்.

மேலே இருக்கும் பகுதியிலிருந்து கொஞ்சம் முடியை மட்டும் எடுக்கவேண்டும், அதேபோல் கீழே இருக்கும் முடியிலும் கொஞ்சம் எடுத்து இரண்டையும் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து பின்னல் போடுவதைப் போன்று மாறி மாறி பிணைக்கவேண்டும். கடைசியில் கீழே இருக்கும் முடிக்கு மட்டும் ரப்பர் பேண்டு போட்டுவிட, மேலே இருக்கும் முடியானது லேயர் பந்துகளாக தெரியும்.


லேயர் பந்துகளாக தெரியும் முடி

அந்த முடியை டெய்ல் கோம்ப் அல்லது விரல்களால் கொஞ்சம் இழுத்துவிட்டு, மீதமுள்ள முடி முழுவதுக்கும் அதேபோல் கீழ், மேல் என மாறி மாறி முடியை கொண்டு சென்று ரப்பர் பேண்டு போட்டு லேயர்களை செட் செய்யவேண்டும். ஒவ்வொரு லேயர் முடியும்போதும் கலையாமல் இருக்க ஹேர் ஸ்ப்ரே அடித்து செட் செய்யவேண்டும். கடைசியாக ரப்பர் பேண்டு போட்டு முடித்துவிட்டால் பின்புற ஹேர் ஸ்டைல் ரெடி.

இந்த ஹேர் ஸ்டைல் செய்யும்போது கை மற்றும் விரல்களில் க்ரிப் மிகவும் அவசியம். இந்த ஹேர் ஸ்டைல் செய்யும்போது தலைமுடி சிக்கில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


முன்பகுதியில் ட்விஸ்டட் ஹேர் ஸ்டைல்

அடுத்து மேல்புறத்தில் இரண்டு பகுதிகளாக எடுத்துவிட்டிருந்த முடியில் ஸ்டைல் செய்யவேண்டும். முதலில் ஒரு பக்கத்தில் நன்றாக சீவி, அந்த முடியை பின்னல் போடுவதற்கு ஏற்ப பகுதிகளாக பிரித்து, நெற்றி பகுதியில் பின்னல் போடுவதைப் போன்று முடியை கொண்டுசென்று, உள்பகுதியில் உள்ள முடியை கீழாக ட்விஸ்ட் செய்யவேண்டும். இந்த ட்விஸ்டட் பின்னலை போனிடெய்ல் வரை கொண்டுசென்று, அதன்மேல் சுற்றி யு-பின் அல்லது ஹேர்பின் கொண்டு செட் செய்யவேண்டும். இதையே அடுத்த பகுதிக்கும் செய்து பின் செய்யவேண்டும்.


பின்புறத்தில் கலர்ஃபுல் லீஃப்ஸ் பயன்படுத்தி செய்யப்படும் அலங்காரம்

ஹேர் ஸ்டைல் முடிந்தபிறகு அதன்மேல் எந்த மாதிரியான அலங்காரம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். கலர்ஃபுல் லீஃப்ஸை எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றாக தலையின் மேற்பகுதியில் வைத்து பின் செய்யவும். வேண்டுமானால் முடியின் லேயர்களிலும் பெர்ல் அல்லது பூ அலங்காரம் செய்துகொள்ளலாம். 

Tags:    

மேலும் செய்திகள்