எடை குறைப்பு வேறு... கொழுப்பு குறைப்பு வேறு... வித்தியாசத்தை தெரிஞ்சுக்கோங்க...
உடலிலுள்ள கொழுப்பை குறைப்பது என்பதை விட, சரியான வாழ்க்கைமுறை மூலம் அதனை நிலையாக பராமரிக்க வேண்டும் என்பதே முக்கியம். சீக்கிரத்தில் எடையை குறைத்தால் வேகமாக எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
உடலில் எடை இழப்புக்கும்,கொழுப்பு இழப்புக்கும் இடையேயான வித்தியாசத்தை தெரிந்துகொண்டு அதை பின்பற்றினாலே ஆரோக்கியமான மற்றும் நிலையான உடல்வாகை பெறமுடியும். அதற்கு சில முக்கியமான பாயிண்டுகளை தெரிந்துகொள்வது அவசியம். எடை குறைப்பு என்பது மொத்த உடல் எடையை குறைத்தல், அதாவது நீர் எடை, தசை எடை மற்றும் கொழுப்பு எடை என அனைத்தும் அதில் அடங்கும். எடை குறைப்பு என்பது மெலிந்த தசைகளை அப்படியே உடலில் தக்கவைத்து தேவையற்ற தசை மற்றும் கொழுப்பை குறைப்பதாகும். உடலிலுள்ள கொழுப்பை குறைப்பது என்பதை விட, சரியான வாழ்க்கைமுறை மூலம் அதனை நிலையாக பராமரிக்க வேண்டும் என்பதே முக்கியம். சீக்கிரத்தில் எடையை குறைத்தால் வேகமாக எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
டயட் மட்டும் போதாது
எடை இழப்பு மற்றும் கொழுப்பு இழப்பு இரண்டிற்குமே டயட் அவசியம் என்றாலும், கூடவே உடற்பயிற்சி செய்வதும் மிக மிக அவசியம். தினசரி உடற்பயிற்சியுடன் உடல் வலிமையை அதிகரிக்க பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் மெலிந்த தசைகள் உடலில் தக்கவைக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் மட்டும் கரையும். இதனால் எடை குறைவதுடன் கட்டுக்கோப்பான உடல்வாகும் கிடைக்கும்.
உடல் எடையும் மெட்டபாலிசமும்
மெட்டாபாலிசத்தின்மீது கவனம் தேவை
வேகமான எடை இழப்பு மெட்டபாலிசத்தின்மீது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் எனர்ஜி அளவு வேகமாக குறைந்து சோர்வடைய நேரிடும். எனவே முறையான பயிற்சியுடன்கூடிய எடை குறைப்பு என்பது தசை வலிமை மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.
எடை இழப்பா? அல்லது கொழுப்பு இழப்பா?
உடலிலுள்ள கொழுப்பை குறைப்பதுதான் எடையை குறைப்பதைவிட ஆரோக்கியமானது. கடுமையான டயட்டானது வேகமாக எடையை குறைக்க உதவலாம். ஆனால் அப்படி செய்வதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என்பதை மறக்கவேண்டாம். எடையை குறைத்து, அந்த உடல்வாகை நீண்டகாலம் பராமரிக்க வேண்டுமானால், சரிவிகித டயட்டை பின்பற்ற வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.