அக்குபஞ்சரில் 100% இதய அடைப்பை சரிசெய்யலாம்! - மருத்துவர் லூர்து சேத்

அக்குபஞ்சரில் உணவு கட்டுப்பாடு என்று கிடையாது. ஆனால் எந்தவொரு சுவை உணவாக இருந்தாலும் அதை அதிக சுவையுடன் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது அது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம்.

Update: 2024-08-26 18:30 GMT
Click the Play button to listen to article

உடலில் வரக்கூடிய எல்லா பிரச்சினைகளுக்குமே மனம் முக்கிய காரணமாக இருக்கிறது. மனதில் துக்கம், கவலை ஏற்படும்போது அதுவே பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். முதலில் மனதை அமைதிப்படுத்துவதன்மூலம் பெரும்பாலான வியாதிகளை குணப்படுத்த முடியும். அதை அக்குபஞ்சர் சிகிச்சையில் திறம்பட செய்யமுடியும் என்கிறார் அக்குபஞ்சர் மருத்துவர் லூர்து சேத். மேலும் அக்குபஞ்சர் சிகிச்சையில் எந்தெந்த வியாதிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்தும் விளக்குகிறார் அவர்.

உடலில் பிரச்சினையுடன் வருபவர்களுக்கு எப்படி அதை கண்டறிந்து எப்படி சரியான சிகிச்சை அளிக்கிறீர்கள்?

ஒன்று நாடித்துடிப்பை பார்த்து கண்டறிவது, மற்றொன்று அறிகுறிகளை வைத்து கண்டறிவது என இரண்டுவிதமாக பிரச்சினைகளை கண்டறியலாம். உதாரணத்திற்கு, வீட்டில் ஒருவருக்கு 100 குடம் தண்ணீர் எடுத்து தொட்டியில் நிரப்பும் வேலையை கொடுத்திருக்கிறீர்கள். அந்த தண்ணீரை வேறொரு பெரிய வேலைக்கு பயன்படுத்தவேண்டும். ஆனால் தண்ணீர் வரவில்லை என்றால் திட்டமிட்ட வேலை நடக்காது. அப்படித்தான் ஒருவருக்கு இருமல் வந்துகொண்டே இருந்தால் உடலுக்குள் நுரையீரல் அல்லது வயிற்றில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். சில சமயங்களில் முதல் சிட்டிங்கிலேயே சரியாக்கிவிட முடியும். இல்லாவிட்டால் நாடித்துடிப்பை பார்த்து சிகிச்சை அளித்தால் கண்டிப்பாக சரிசெய்துவிட முடியும். எனவே அறிகுறிகளை சரியாக சொன்னாலே அதைவைத்து சரியாக சிகிச்சையளிக்க முடியும்.

ஆங்கில சிகிச்சையில் ஒரு ஊசிமூலம் மருந்து செல்த்துவதற்கே பலர் பயப்படுவார்கள். இந்த சிகிச்சையில் எப்படி பல ஊசிகளை பயன்படுத்துகிறீர்கள்?

அக்குபஞ்சர் சிகிச்சையில் நரம்பில் ஊசி குத்துவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால், நரம்பு இருந்தால்கூட அதை விலக்கிவிட்டு சதைப்பகுதியில்தான் ஊசியை குத்துவார்கள். அக்குபஞ்சர் ஊசியானது மிகவும் கூர்மையாக, மயிரிழை அளவில்தான் இருக்கும். அதனால் குத்தும்போது வலிக்காது. ஆனால் இடம்மாறி குத்தினால் வலிக்கும். இதில் பெரிய அளவிலான ஊசிகளும் பயன்படுத்தப்படும். ஆனால் அதையும் சரியான இடத்தில் குத்தும்போது வலிக்காது. ஒருசில இடங்களில் மட்டும் மிகவும் லேசான வலி இருக்கும். அதாவது 98% எந்த ஊசியும் வலிக்காது. ஆனால் ஒரு 2% வலி இருக்கும். அந்த வலியை குறைக்கவும் சில வழிமுறைகள் இருக்கின்றன.


ஆங்கில மருத்துவத்தில் ஒரு ஊசி கொடுக்கும் வலியைவிட அக்குபஞ்சரில் பல ஊசிகளின் வலி மிகமிக குறைவு

ஒவ்வொரு சிகிச்சையிலும் குறிப்பிட்ட வியாதிகளுக்கு உணவு கட்டுப்பாடுகள் கொடுக்கப்படுகின்றன. அக்குபஞ்சரில் அதுபோல் உள்ளதா?

அக்குபஞ்சரில் உணவு கட்டுப்பாடு என்று கிடையாது. ஆனால் எந்தவொரு சுவை உணவாக இருந்தாலும் அதை அதிக சுவையுடன் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது அது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம். உதாரணத்திற்கு, உப்பு சுவை அதிகம்கொண்ட உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிப்படையும். அதேபோல் உப்பே சேர்க்காமல் இருந்தாலும் சிறுநீரக பிரச்சினை வரும். எனவே ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு சுவையும் எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு உட்கொண்டாலே போதுமானது. ஒரே சுவையை அதிகமாக சாப்பிடும்போது அதுவே நஞ்சாக மாறி, உறுப்பை பாதித்துவிடும். அதேபோல் அதிக காரம் சாப்பிட்டால், நுரையீரல் மற்றும் வயிற்றில் பிரச்சினைகள் வரும். அதிக இனிப்பு சாப்பிட்டால் மண்ணீரல் மற்றும் வயிறு பாதிக்கப்படும். புளிப்பு அதிகம் எடுத்துக்கொண்டால் கல்லீரலும், கசப்பு அதிகம் சேர்த்தால் இதயமும் பாதிக்கப்படும்.

மாரடைப்புக்கு அக்குபஞ்சரில் முறையான சிகிச்சை இருக்கிறதா?

100% இதய அடைப்பை சரிசெய்யலாம். மண்ணீரல் பிரச்சினையின் வெளிப்பாடுதான் இதய பிரச்சினையாக வெளியே தெரிகிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பதால் இதயத்தில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் சொல்வார்கள். இப்போது சரிசெய்ய வேண்டியது ரத்தத்தையா அல்லது இதயத்தையா என்பதை சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்புக்குமே ஒரு உணர்வுத்தன்மை இருக்கிறது. அதிகமாக கவலை அல்லது துக்கப்படும்போது அடைப்பு ஏற்படும். ஒவ்வொரு உணர்ச்சியாலும் ஒவ்வொரு உறுப்பு பாதிக்கப்படும்.


இதயம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு அக்குபஞ்சரில் சிறந்த சிகிச்சை

மருந்து சாப்பிட்டு ஒரு வியாதி குணமடைந்தாலும் கேன்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் திரும்ப வர வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள். அக்குபஞ்சர் சிகிச்சையால் பூரண குணம் கிடைக்குமா?

அக்குபஞ்சர் சிகிச்சைக்கு பிறகு பூரண குணம் கிடைக்கும். உதாரணத்திற்கு, கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவருக்கு முழுமையாக சரிபடுத்தியபிறகு, மீண்டும் ஆல்கஹால் எடுத்துக்கொண்டால் மீண்டும் பிரச்சினை வரத்தான் செய்யும். உடல் நன்றாக இருக்கவேண்டுமென மருத்துவர் மட்டுமில்லாமல் சம்பந்தப்பட்ட நபரும் நினைக்கவேண்டும். உதாரணத்திற்கு, உடல் சூடு அதிகமாக இருந்தாலும் சிறுநீரகம் பாதிப்படையும். இரவில் தூங்காமல் விழித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு வரும். அதேபோல், நுரையீரல் பிரச்சினையை சரிசெய்தபிறகு சிகரெட் குடிக்கக்கூடாது என மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் மீண்டும் சிகரெட் பிடித்தால் பிரச்சினை மீண்டும் வரத்தான் செய்யும். இதற்கு மருத்துவர் பொறுப்பாக முடியாது.

தூக்கமில்லாமல் அவஸ்தைப்படும் இம்சோம்னியா பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஸ்கிசோஃப்ரினியா என்று சொல்லக்கூடிய மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அக்குபஞ்சரில் சிகிச்சை இருக்கிறதா?

இதுபோன்ற பிரச்சினைகளுக்குத்தான் 100% இருக்கிறது. உலகிலேயே மனதுக்கும் சேர்த்து சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவம் அக்குபஞ்சர்தான். முதல் புள்ளியே மனதுக்குத்தான். மனம் சரியாகாமல் உடல் சரியாகாது. இங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் ஐந்தே நிமிடத்தில் நன்றாக தூங்கிவிடுவார்கள். எதிர்மறை எண்ண ஓட்டங்கள் மற்றும் மனச்சிதைவால் தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு அதை மாற்றும்போது மனம் அமைதியாவதால்தான் தூக்கம் வருகிறது.


நோய்கள் வராமல் தடுக்க முறையான தூக்கம் அவசியம்

அக்குபஞ்சர் மருத்துவராக பொதுமக்களுக்கு கூறும் கருத்து என்ன?

‘வருமுன் காப்பதே சிறந்தது’ என்பதுதான் என்னுடைய கருத்து. எந்த மருத்துவரையும் தேடிப்போகாமல் உங்களை நீங்களே சரிசெய்துகொள்ள வேண்டும். சிகரெட் பிடிப்பவர்களுக்கு அதை பிடிக்கக்கூடாது என்பது தெரியாமலா பிடிக்கிறார்கள்? நாம் என்ன செய்தாலுமே அதற்கான பலன் என்ன என்பது நமக்கே தெரியும். எனவே எதை செய்தாலும் அதை விழிப்புணர்வுடன் செய்தாலே வியாதிகள் வராது. உதாரணத்திற்கு, கடன் வாங்கினால் அதை கட்டமுடியாது என தெரிந்தும் சிலர் வாங்குவார்கள். அப்படி கட்ட முடியாதபோது கவலை வந்துவிடும். கவலையால் வியாதி வரும். கொஞ்சம் சிந்தித்து செயல்பட்டாலே பெரும்பாலான வியாதிகளை வராமல் தடுக்கமுடியும்.

புகைப்பழக்கம் மற்றும் போதைப்பழக்கங்களுக்கு rehabilitation சென்டர்களை போன்று, அக்குபஞ்சரில் சிகிச்சையளிக்க முடியுமா?

De addictions என சிகிச்சைமுறைகள் அக்குபஞ்சரில் இருக்கின்றன. ஆனால் இந்த சிகிச்சைக்கு முன்பு பாதிக்கப்பட்ட நபர் தான் அதிலிருந்து வெளிவர வேண்டும் என நினைக்கவேண்டும். அதுவே வற்புறுத்தி ஒருவரை அழைத்துவரும்போது எத்தனை நாட்கள் அவர்கள் சிகிச்சைக்கு வருவார்கள்? மறுவாழ்வு மையங்களில் பாதிக்கப்பட்டவர்களை உள்ளே வைத்து பூட்டி, சிகரெட், மது என எதுவும் கொடுக்காமல் சிகிச்சையளிப்பதாக சொல்வார்கள். ஆனால் அதில் நிறையப்பேர் குணமடைந்ததாக சொல்வதில்லை. எனவே பாதிக்கபட்ட நபர்தான் முதல் அடியை எடுத்துவைக்கவேண்டும்.


போதைப்பழக்கத்திலிருந்து மீண்டுவர அக்குபஞ்சர் சிகிச்சை

அக்குபஞ்சர் சிகிச்சை எந்தெந்த வயதினருக்கெல்லாம் ஏற்றது?

8 மாத குழந்தைமுதல் நான் சிகிச்சையளித்திருக்கிறேன். குழந்தைகளுக்கெல்லாம் ஊசி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு முக்கிய புள்ளிகளில் கொடுக்கப்படும் தொடுதலே போதுமானது. ஒருமுறை 103 டிகிரி காய்ச்சல் இருக்கும் குழந்தையை என்னிடம் கொண்டுவந்தார்கள். குழந்தையை கையில் வாங்கி சில புள்ளிகளில் தொடுதல் சிகிச்சையளித்தேன். 5 நிமிடத்தில் குழந்தை விளையாட ஆரம்பித்துவிட்டது. அக்குபஞ்சர் சிகிச்சைக்கு வயதே கிடையாது.

மூளை வளர்ச்சியின்மை, முடக்குவாதம் போன்ற பிறவி பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களை சரிசெய்யலாமா?

இதை சரிசெய்ய முடியாது. சில பிரச்சினைகள் குழந்தைகள் பிறக்கும்போதே அதன் டி.என்.ஏவில் இருக்கும். அதை எந்த சிகிச்சைமுறையிலும் குணப்படுத்த முடியாது.


எந்த மருத்துவத்திலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துதல் அசாத்தியம்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வர்ம புள்ளியை வைத்து குணப்படுத்த முடியுமா?

வர்மாவில் நிறைய அக்குபஞ்சர் புள்ளிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் வர்மாவில் அழுத்தம் கொடுத்து சிகிச்சையளிக்கிறார்கள். அக்குபஞ்சரில் ஊசியை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. எந்த சிகிச்சையாக இருந்தாலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை 100% குணப்படுத்த முடியாது. ஆனால் படுக்கையில் இருப்பவர்களை நடக்கவைத்தல் போன்று கொஞ்சம் கொஞ்சம் சரிசெய்ய முடியும்.

முத்திரைகள், கை தட்டுதல், அக்கு பிரஷர் போன்றவை எந்த அளவிற்கு உண்மை?

முத்திரைகள் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் கைதட்டுதல், பிரஷர் கொடுத்தல் போன்றவற்றால் வியாதி போகும். Sujok என்று சொல்லக்கூடிய reflexology-யில் இந்த சிகிச்சை இருக்கிறது. இதன்மூலம் வியாதிகளை குணப்படுத்த முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்