உடல்நலம் முதல் மனநலம்வரை அனைத்தையும் மலர் மருத்துவம் மூலம் சரிசெய்யலாம்! - நிபுணர் வர்மா

வாழ்க்கைமீதே நம்பிக்கையற்று இருப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க ஒரு மருந்து இருக்கிறது. அந்த மருந்தை எடுத்துக்கொண்டால் வாழ்க்கையில் தன்னம்பிக்கை வந்துவிடும். ஒருசிலர் எப்போதும் சோர்வாக இருப்பதாக சொல்வார்கள். அப்படிப்பட்ட சோர்வை நீக்கவும் மருந்து இருக்கிறது.

Update:2024-09-17 00:00 IST
Click the Play button to listen to article

உலகில் பல மருத்துவமுறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வியாதிக்கும் குறிப்பிட்ட சிகிச்சைமுறைகளால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் அவற்றில் பெரும்பாலான மருத்துவமுறைகள் உடல்நலன் மற்றும் அதன் தன்மையைக்கொண்டுதான் செயலாக்கப்படும். குறிப்பிட்ட மருத்துவமுறைகள்தான் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்குமே மனநலனை சரிசெய்தாலே போதும் என சொல்கிறது. அப்படிப்பட்ட சிகிச்சைமுறைகளில் ஒன்றுதான் மலர் மருத்துவம். இந்த மருத்துவத்தின்மூலம் நமக்குள் இருக்கும் சிறுசிறு மனநல பிரச்சினைகள் மற்றும் குணாதிசயங்களைக்கூட சரிசெய்யமுடியும் என்கிறார் மலர் மருத்துவ நிபுணர் வர்மா. ஏற்கனவே மலர் மருத்துவம் என்றால் என்ன? இந்த சிகிச்சைமுறை எப்படி செயல்படுகிறது? மற்றும் என்னென்ன நோய்களுக்கு மலர் மருத்துவம்மூலம் சிறந்த தீர்வு கிடைக்கிறது? என்பது குறித்தெல்லாம் முதல் பாகத்தில் பார்த்தோம். இந்த பாகத்தில் வாழ்க்கையை மேம்படுத்த மலர் மருத்துவம் எப்படி உதவுகிறது என்பது உட்பட பல கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் அவர்.

போதைப்பொருட்களைத் தாண்டி, இந்த சிகிச்சைமூலம் டீ, காபி அடிக்‌ஷனிலிருந்தும் வெளிவர முடியுமா?

டீ, காபி, பாக்கு, சிகரெட் போன்ற அனைத்துவகையான அடிமைத்தனத்தையும் இந்த சிகிச்சைமூலம் சரிசெய்யமுடியும். சிகிச்சை எடுக்க ஆரம்பித்த 15 - 20 நாட்களுக்குள் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்து பிறகு படிப்படியாக குறைந்துவிடும். இதுபோன்ற அடிமைத்தனங்களிலிருந்து வெளிவந்தபிறகு, தங்களுடைய வேலையை சிறப்பாக செய்து அதில் பெரிய அளவில் வருவார்கள். அதேபோல் படிப்பு அல்லது தொழிலில் புதிதாக ஏதேனும் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டால் அதற்கென இருக்கும் பிரத்யேக மருந்தை சாப்பிட்டால், அந்த துறையில் இங்குள்ள நிபுணர்களைவிடவும் ஒரு படி மேலே சென்று விஷயங்களை சொல்லமுடியும். உதாரணத்திற்கு, பியானோ படிக்கும் ஒரு சிறுவன் 6 மாதங்கள் கற்றுக்கொண்டு அதை விட்டுவிடுகிறான். அவன் மீண்டும் பியானோ கற்கவேண்டுமானால் மீண்டும் முதலிலிருந்துதான் வரவேண்டும். ஆனால் இந்த மருந்தை சாப்பிட்டால் எங்கு விட்டானோ அங்கிருந்தே தொடங்கமுடியும்.


அடிக்‌ஷனிலிருந்து வெளிவர - விட்ட இடத்திலிருந்து கற்க உதவும் மலர் மருந்துகள்

வாழ்க்கைமீது வெறுப்பு, சோகம், நம்பிக்கையின்மையுடன் இருப்பவர்களுக்கு சிகிச்சை இருக்கிறதா?

வாழ்க்கைமீதே நம்பிக்கையற்று இருப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க ஒரு மருந்து இருக்கிறது. அந்த மருந்தை எடுத்துக்கொண்டால் வாழ்க்கையில் தன்னம்பிக்கை வந்துவிடும். ஒருசிலர் எப்போதும் சோர்வாக இருப்பதாக சொல்வார்கள். அப்படிப்பட்ட சோர்வை நீக்கவும் மருந்து இருக்கிறது. எந்த நேரத்தில் எதை செய்வது என தெரியாமல் மனக்குழப்பமாக இருப்பவர்களுக்கு அதை சரிசெய்யவும் மருந்து இருக்கிறது. ஒருசிலருக்கு குறிப்பிட்ட ஒரு பொருளை ரிப்பேர் செய்ய தெரியாது. ஆனால் அதை தானே செய்யவேண்டுமென்று ஆரம்பித்து செய்யமுடியாமல் அந்த பொருளை கடைசியில் தூக்கிப்போட்டு விடுவார்கள். இதுபோன்ற பிடிவாத குணத்தை சரிசெய்ய மருந்து இருக்கிறது. ஒருசிலர் வீட்டுக்கு வந்தால் பேசிக்கொண்டே இருப்பார்கள். கிளம்பும்போதும், கதவு அருகே, வாசல் அருகே என ஒவ்வொரு இடமாக நின்று பேசுவது, கையை பிடித்துக்கொண்டு பேசுவது என இருப்பார்கள். இதுபோன்றவர்களையும் சரிசெய்ய மருந்து இருக்கிறது.

அலர்ஜி, பூச்சிக்கடி போன்ற பிரச்சினைகளை இந்த சிகிச்சை மூலம் சரிசெய்யலாமா?

தாராளமாக செய்யலாம். இந்த சிகிச்சை மனிதர்களுக்கு மட்டுமே கிடையாது. இந்த மருந்தை மரம், செடி, கொடி, வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் என அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.


உடலில் ஏற்படும் அலர்ஜி, பூச்சிக்கடி போன்றவற்றிற்கு மலர் மருந்துகள் மூலம் தீர்வு!

இந்த மருத்துவம் எத்தனை வருடங்களாக இருக்கிறது?

1930இல் எட்வர்டு பாட்ச் கண்டுபிடித்ததிலிருந்து இந்த சிகிச்சைமுறை இருக்கிறது. இன்னும் 6 ஆண்டுகளில் இந்த மருத்துவமுறை நூறாண்டை எட்டப்போகிறது. இந்தியாவில் கிருஷ்ணமூர்த்தி என்ற மருத்துவரால்தான் இந்த சிகிச்சைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. நமது ஊரில் மலர் மருத்துவர் என்று சொல்லக்கூடிய அனைவருமே அவரிடம் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். இதில், அடிப்படை மருத்துவத்தை பயின்றுவிட்டு, ஆங்கில புத்தகங்களை படிப்பது, மனநிலைக்கு ஏற்ப மருத்துவத்தை பயில்வது என நிறைய படிக்கவேண்டி இருக்கும். ஆனால் மலர் மருத்துவத்தை பொருத்தவரை அனைத்து பிரிவுகளையும் படித்தாலும் கடைசியில் மனம் என்பதில்தான் வந்துநிற்கும்.

உங்களுடைய 15 வருட அனுபவத்தில் மற்ற மருத்துவர்களால் கைவிடப்பட்டவரை குணப்படுத்தியதுண்டா?

12 வருடங்களாக தனது உடலிலிருந்த பிரச்சினைகளை வேறு எந்த மருத்துவத்தாலும் சரிசெய்ய முடியவில்லை என கூறிக்கொண்டு ஒருவர் என்னிடம் வந்தார். அவரிடம் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் பேசி, மருந்து கொடுத்தேன். மருந்து வாங்கிச்சென்ற 15 நாட்கள் அந்த நபரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. 16வது நாள் ஸ்வீட் பாக்ஸ், பூ என வாங்கிக்கொண்டு அவர் என்னை பார்க்கவந்தார். தனக்கிருந்த பிரச்சினைகளை மிக குறைந்த செலவில் சரிசெய்துகொடுத்ததற்கு நன்றி என தெரிவித்தார். அதேபோல், ஒரு 5 வயது குழந்தையை குளிப்பாட்டி உட்கார வைத்தால் அப்படியே உட்கார்ந்தே இருக்கும். அப்படி இருந்த குழந்தையை என்னிடம் கொண்டுவந்தார்கள். நான் ஒரு மருந்து கொடுத்தேன். 3ஆம் நாளிலேயே குழந்தை தானாகவே நடக்க ஆரம்பித்தது. 15 நாட்களுக்கு பிறகு அந்த குழந்தை பேச ஆரம்பித்துவிட்டது. இப்படி மலர் மருத்துவம் மூலம் அனைத்து பிரச்சினைகளையுமே சரிசெய்ய முடியும். ஒரு நபர் இறந்தபிறகு, அவர்மீது குறிப்பிட்ட ஒரு மருந்தை தெளிப்பதன்மூலம் ராஜமரியாதையுடன் அந்த உடலை அடக்கம் செய்யவும் முடியும்.


குழந்தைகளின்மீது மலர் மருந்துகளை தடவினாலே போதும்

எந்த வயதிலிருந்து மலர் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்?

அனைத்து வயதினரும் எடுத்துக்கொள்ளலாம். சிறு குழந்தைகளுக்கு இந்த மருந்தை உடல்மீது தடவிவிட்டால்கூட போதும். பிறந்த குழந்தைக்குக்கூட மருந்து இருக்கிறது. தாய் - தந்தை செய்த பாவம் குழந்தையை சேராமல் இருக்கக்கூட மருந்து இருக்கிறது. குழந்தை பிறந்த ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குள் குழந்தைமீது அந்த மருந்தை போட்டால் தாய் - தந்தை செய்த பாவம் குழந்தையை தாக்காது.

பரம்பரை நோய்கள் மற்றும் புற்றுநோய்களை சரிசெய்யமுடியுமா?

தலைமுறை தலைமுறையாய் வருகிற நோய்களை சரிபடுத்த மருந்துகள் இருக்கின்றன. புற்றுநோய் என்பது அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. அந்த நபருடைய வாழ்க்கையில் அல்லது மனதில் பாதிப்பை ஏற்படுத்தும்வண்ணம் ஏதாவது நடந்திருக்கும். அதை ஆராய்ந்து அதற்கான சரியான காரணத்தை கண்டறிந்து, மருந்து கொடுத்தால் குணப்படுத்தமுடியும்.


பயம், குழப்பம் போன்ற மனநிலைகளை சரிசெய்யும் மலர் மருத்துவம்!

மலர் மருத்துவத்தில் மனநிலைதான் முக்கிய காரணம் என்று சொல்கிறீர்கள்? அதை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?

7 வகையாக பிரிக்கலாம். பயம், அடுத்தவரை சார்ந்திருத்தல், தான்தான் பெரிய ஆள் என எண்ணிக்கொண்டிருத்தல் என 7 வகை மனநிலையில் ஒவ்வொன்றிற்கும் 3 மருந்துகளும், ஒன்றுக்கு 7 மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒருசிலருக்கு எல்லாவற்றுக்கும் பயம் ஏற்படும். உதாரணத்திற்கு, தினமும் 3 மணிக்கு பள்ளி முடிந்து 3.40க்கெல்லாம் வீட்டிற்கு வரும் சிறுவன், 5 நிமிடம் லேட்டானாலே அம்மாவிற்கு பயம் வந்துவிடும். 5-10 நிமிடங்கள் லேட்டாவது சகஜம்தான் என்றாலும் 100 முறை வாசலுக்கு சென்று பார்ப்பார்கள். அதேபோல், எப்போதும் அம்மா பின்பே சில குழந்தைகள் பயந்துபோய் ஒளிந்துகொள்ளும். இதுபோன்ற பயங்கள் வருபவர்களுக்கு அந்த மனநிலையை சரிசெய்ய மருந்துகள் இருக்கின்றன. ஒரு கடைக்கு செல்லும்போது அந்த கடையின் உரிமையாளர் என்ன மனநிலை உள்ளவர் என்பதைக்கூட கண்டுபிடிக்க முடியும். உதாரணத்திற்கு, ஒருசில கடைகளில் ‘No Bargain, Fixed price' என்று போர்டு வைத்திருப்பார்கள். இந்த நபர்கள் அக்ரிமோனி என்ற மலருடைய தன்மையாளர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பேரம் பேசி நேரத்தை கடத்துவது பிடிக்காது. அதேபோல் ஆட்டோக்காரர்கள் எப்போதும் பேரம் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் ஒரு மருந்தை நீங்கள் சாப்பிட்டுவிட்டு சென்றால் எதிரில் இருப்பவர் பேரம் பேசவே மாட்டார். நீங்கள் என்ன ரேட் நினைக்கிறீர்களோ அதைத்தான் சொல்வார்கள். எதிரிலிருப்பவரின் மனநிலையைக்கூட மாற்றக்கூடிய அற்புதம் இந்த சிகிச்சைமூலம் நடக்கும். இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் பெயர்களே வித்தியாசமாக இருக்கும். உதாரணத்திற்கு, ஹார்ன் - பீம் என ஒரு மருந்து இருக்கிறது. பகலில் வாகனத்தை ஓட்டும்போது ஹார்ன் அடிப்போம். அதுவே இரவில் பீம் என்ற சத்தத்துடன்தான் இன்டிகேட்டர் போடுவோம். ஒரு வேலையை செய்யவே முடியாது என மலைத்துப்போய் இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அற்புதமாக செய்துமுடிப்பார்கள். இந்த மருந்து உழைக்கும் வர்க்கத்திற்கு உண்டான மருந்து. உடலில் சோர்வே தெரியாமல் அசால்ட்டாக ஒரு வேலையை செய்துமுடிக்க இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாம். தன்னைத்தானே குறை சொல்பவர்கள், அடுத்தவர்களை குறை சொல்பவர்கள் என அனைவரின் குறைகளை நீக்கவும் இந்த சிகிச்சையில் மருந்துகள் இருக்கின்றன.


சூரியபதம் மற்றும் கொதிக்கவைக்கும் முறைகளில் தயாரிக்கப்படும் மலர் மருந்துகள்

மலர் மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

பக்கவிளைவுகளே இருக்காது. இதில் சூரிய பதம் மற்றும் நீரில் போட்டு கொதிக்கவைக்கும் முறை என இரண்டு முறைகளில்தான் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஒருசில மலர்களின் இதழ்களை தனியாக எடுத்து அதை சீரோ வாட்டர் எனும் நீரில் போட்டு வெயிலில் வைத்துவிடுவார்கள். காலை 6 மணிக்கு வெயிலில் வைத்து 11.45க்குள் அதை எடுத்துவிடுவார்கள். அந்த நீரை ஹோமியோபதியில் பயன்படுத்தும் மெடிசனல் ஆல்கஹாலுடன் சேர்த்து கொடுப்பார்கள். அதேபோல் ஒருசில பூக்களின் இதழ்களை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரை கொடுப்பார்கள். இந்த முறைகளை இங்கிலாந்து மலர்களை வைத்துதான் இன்றுவரை செய்கின்றனர். நமது ஊரில் கிடைக்கும் மலர்களை வைத்து ஏன் செய்வதில்லை? என்ற கேள்வியை பலரும் கேட்பார்கள். இங்குள்ள மலர்களுக்கும் மருத்துவத்தன்மை இருந்தாலும் அதை எப்படி பயன்படுத்துவது? என யாரும் இதுவரை சொல்லாமல் ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, வெள்ளைத்தாமரையின் இதழ்களை பறித்து, கழுவி, தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, படிக்கும் பிள்ளைகளுக்கு கொடுத்தால் படிப்பு நன்றாக வரும். மலர் மருத்துவ மருந்துகளை வெயில் படாமல் வைத்துக்கொள்ள வேண்டும். திறந்துவைத்தால் ஆவியாகிவிடும். ஆனால் அப்படி ஆவியானாலும் அந்த ஆற்றல் நம்மை சுற்றி பரவி நன்மையையே கொடுக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்