மாநிற பெண்களுக்கான நேர்த்தியான மேக்கப்! இந்த ஸ்டெப்ஸ்களை பின்பற்றுங்கள்!

Update:2024-09-24 00:00 IST
Click the Play button to listen to article

பெண்களை பொருத்தவரை தான் எப்போதும் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதே சமயம் அவர்களின் சரும நிறம் சீராக இருக்க வேண்டும் என்றும் எண்ணுவார்கள். மேலும் நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி என எல்லா நிகழ்வுகளிலும் மேக்கப் நேர்த்தியாக இருப்பதையே விரும்புவார்கள். மேக்கப் போட்டபிறகும் நான் நானாக தெரிய வேண்டும் எனவும் சிலர் சொல்வார்கள். இப்படி சிறப்பாகவும், நேர்த்தியாகவும் தயாராவது எப்படி என சொல்லிக் கொடுத்து விளக்கமளிக்கிறார் அழகு கலை நிபுணர் கிரிஜா தேவி.

செயல்முறை :

மேக்கப் போடுவதற்கு முன்னால் முகத்தை நல்ல க்ளென்சரை வைத்து நன்கு மசாஜ் செய்து வாஷ் செய்வது அவசியம். முகத்தில் உள்ள ஈரம் காய்ந்த உடன் அல்லது நன்கு துடைத்து பிறகு டோனர் போட்டு கைகளை வைத்து டேப் செய்துவிட வேண்டும்.


க்ளென்சர் அப்ளை செய்தல்

முகத்தின் தன்மைக்கேற்ப மாய்ச்சுரைசர் தேர்வு செய்து அப்ளை செய்ய வேண்டும். மாய்ச்சுரைசர் போட்டு 2 முதல் 3 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து செட்டானதும் பிரைமரை அப்ளை பண்ண வேண்டும்.

அடுத்ததாக கண்ணுக்கு கன்சீலர் பேஸ் கொஞ்சம் அதிக அளவில் போட்டுக் கொள்ள வேண்டும். கன்சீலர் மீது பிக்சிங் பவுடரை பிரஷ் வைத்து டேப் செய்ய வேண்டும்.


கண்ணுக்கு கன்சீலர் பேஸ் போடும் முறை

உடையின் நிறத்திற்கு ஏற்ப ஐ-ஷேடோவை எடுத்து க்ரீஸ் லைனில் அப்ளை செய்துவிட வேண்டும். அப்போதுதான் இன்னர் கார்னரில் ஒயிட் க்ளிட்டர் போட்டால் ஐ-லுக் நன்றாக இருக்கும்.

ஐ-மேக்கப்பில் புருவங்களை நேர்த்தியாக நிரப்புவதுதான் முக்கியம். நேச்சுரல் டோனாக இருக்க பிரவுன் கலர் வைத்து அவுட்லைன் வரைந்து நடுவிலிருந்து ஒரு டோன் டார்க் கலரில் நிரப்ப வேண்டும்.

தேவைப்பட்டால் ஐ-லேஷஸ் வைத்து ஐ-லைனர் போட்டு, வாட்டர் லைனில் காஜல் போட்டு ஐ-மேக்கப்பை முடித்து விடலாம். அடுத்ததாக டார்க் ஸ்பாட்கள் இருப்பின் அதனை கன்சீலர் வைத்து டேப் செய்துவிட வேண்டும்.

ஃபவுண்டேஷனில் சரியான ஷேட் கிடைப்பது கடினம். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு டார்க் கலர் மற்றும் ஒரு லைட் கலர் சேர்த்து சரியான ஷேடை முகம், கழுத்து, காது என எல்லா இடங்களிலும் பிரஷ் வைத்து டேப் செய்ய வேண்டும்.

மீண்டும் கன்சீலர் அப்ளை செய்து, தேவையான இடத்தில் கான்டோர் போட்டு லூஸ் பவுடர் பிரஷ் வைத்து பேக் செய்ய வேண்டும். ஹைலைட்டர் பயன்படுத்தி கன்னம், நெற்றி மற்றும் உதட்டின் மேலே ஹைலைட் பண்ண வேண்டும்.


நேர்த்தியான சிம்பிள் பார்ட்டி லுக்

உடைக்கு ஏற்றாற்போல் லிப்ஸ்டிக் போட்டு, செட்டிங் ஸ்பிரே அடித்தால் நேர்த்தியான பார்ட்டி லுக் மேக்கப் முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்