முகம் முதிர்ச்சி அடையாமல் இருக்க இந்த ஃபேஷியல் பண்ணி பாருங்க!

ஃபேஸ் மாஸ்க் போடுவதுடன், ஃபேஸ் மசாஜ் உள்ளிட்டவற்றை அடிக்கடி செய்வதால் முகம் முதிர்ச்சி அடையாமல் இருக்க வாய்ப்புள்ளது. எனவே மாதம் ஒரு முறையேனும், நல்ல ஃபேஷியல் செய்வதும், அப்போது கொடுக்கப்படும் மசாஜும், முகம் மற்றும் மனதை ரிலாக்ஸ் செய்ய உதவியாக இருக்கும்.

Update: 2024-07-29 18:30 GMT
Click the Play button to listen to article

ஆரோக்கியமான சருமம் மற்றும் முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது. முகத்தை பராமரிக்க மாய்ச்சுரைசர், டோனர், விதவிதமான ஃபேஸ் வாஷ், நைட் ஜெல் கிரீம் என பல பொருட்களை இன்றளவில் அனைவரும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஃபேஸ் மாஸ்க் போடுவதுடன், ஃபேஸ் மசாஜ் உள்ளிட்டவற்றை அடிக்கடி செய்வதால் முகம் முதிர்ச்சி அடையாமல் இருக்க வாய்ப்புள்ளது. எனவே மாதம் ஒரு முறையேனும், நல்ல ஃபேஷியல் செய்வதும், அப்போது கொடுக்கப்படும் மசாஜும், முகம் மற்றும் மனதை ரிலாக்ஸ் செய்ய உதவியாக இருக்கும். அந்த வகையில் ஃபேஸ் ஒயிட்னிங் மற்றும் ஃபேஷியல் வாக்ஸ் எப்படி செய்வது என சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் அழகு கலை நிபுணர் மிஷல்.

செயல்முறை :

முதலில் ஒயிட்னிங் கிரீமை அப்ளை செய்து முகத்தை நன்கு க்ளென்ஸ் செய்ய வேண்டும். 2 முதல் 3 நிமிடங்களுக்கு க்ளென்ஸ் செய்தால் முகத்தில் இருக்கும் தேவையில்லாத தூசி, அழுக்கு நீங்கிவிடும். மசாஜ் செய்த பிறகு ஒரு ஈரத்துணி வைத்து முகத்தில் இருக்கும் கிரீமை துடைத்து எடுக்க வேண்டும்.

அடுத்ததாக முகத்தில் ப்ளீச் அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு அப்படியே விட வேண்டும். இதற்கு மாறாக டீ டேன் கிரீமும் உபயோகிக்கலாம்.


ப்ளீச் கிரீம் அப்ளை செய்யும் முறை 

ஸ்க்ரப் அப்ளை செய்து நன்கு மசாஜ் கொடுக்க வேண்டும். இதன்மூலம் எக்ஸஸ் டஸ்ட் எல்லாம் வந்துவிடும். அடுத்ததாக முகத்தை ஸ்ட்ரீம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது முகத்தில் பிளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸ் இருந்தால் எடுக்க சுலபமாக இருக்கும். பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் அடிக்கடி எடுப்பது நல்லது. பெரும்பாலும் முகத்திற்கு பயன்படுத்தும் கிரீம்களை சரியாக கழுவாமல் இருப்பதால் இவ்வாறு வரக்கூடும். இரவு தூங்க செல்வதற்கு முன்னால் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.


மசாஜ் கிரீம் அப்ளை செய்து முகத்திற்கு ஸ்ட்ரீம் கொடுக்கும் காட்சி

ஃபேஸ் வாக்ஸ் செய்வதற்கு முன்னாள் லூஸ் பவுடர் முகத்தில் அப்ளை செய்துகொள்வது நல்லது. இந்த நிலையில் ஃபேஸ் வாக்ஸ் செய்தால் சரியாக இருக்கும். அடுத்ததாக ஃபேஸ் மசாஜ் செய்யும்போது, வாக்ஸ் செய்ததால் ஏற்பட்ட ஸ்வெல்லிங் குணமாகும்.

அடுத்ததாக மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் கிரீமை பயன்படுத்தி எல்லா பிரஷர் பாயிண்ட்களிலும் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்யும்போது ரிலாக்ஸ் ஃபீலிங் கிடைக்கும். இரத்த ஓட்டம் சீராகி இளமையான தோற்றம் எப்போதும் இருக்கும்.

மசாஜ் கிரீம் ரிமூவ் செய்த பிறகு லைட்னிங் சீரம் முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். சீரம் ட்ரையானதும், பீல் ஆப் மாஸ்க் அப்ளை செய்ய வேண்டும். பீல் ஆப் மாஸ்க் அப்ளை செய்து 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து ரிமூவ் செய்ய வேண்டும்.

இறுதியாக முகத்திற்கு சன்-ஸ்கிரீன் போட வேண்டும். சன்-ஸ்கிரீன் அப்ளை செய்வதால் UVA, UVC போன்ற கதிர்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். ஃபேஷியல் செய்ததிலிருந்து 4 முதல் 8 மணி நேரத்திற்கு சோப்பு பயன்படுத்தி முகம் கழுவுவதை தவிர்ப்பது அவசியம்.

Tags:    

மேலும் செய்திகள்