அரைமணி நேரத்தில் மேக்கப் முடித்து பார்ட்டிக்கு கிளம்பலாம்! - அழகு கலை நிபுணர் சத்யா

நீண்ட நேரம் வரைக்கும் மேக்-அப் நீடிக்க வேண்டும், அழியாமல் இருக்க வேண்டும் என்று யோசிப்பதுண்டு. உடைக்கு ஏற்ப மேக்-அப் மற்றும் அதற்கு ஏற்ப அக்சஸரிஸ் வாங்குவதும் எளிதல்ல. அதுமட்டுமல்லாது மேக்-அப்களில் பலவகை இருந்தாலும், இன்றளவில் நோ மேக்-அப் லுக் அதிகம் ஈர்க்க கூடியதாக உள்ளது.

Update: 2024-08-12 18:30 GMT
Click the Play button to listen to article

பெண்களை பொறுத்தவரை பார்ப்பதற்கு எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நடிகர் சூர்யா சொல்வது போல இங்க யாரும் இவ்வளவு ஒரு அழக பார்த்திருக்க மாட்டாங்கன்னு சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்டாயம் இருக்கும். நம்ம வீட்டு நிகழ்ச்சி, நண்பர்கள் வீட்டு விசேஷம் என விழாக்களுக்கு மேக்கப் போட்டு ரெடியாவது சற்று கடினமான வேலைதான். நீண்ட நேரம் வரைக்கும் மேக்கப் நீடிக்க வேண்டும், அழியாமல் இருக்க வேண்டும் என்று யோசிப்போம். உடைக்கு ஏற்ப மேக்கப் மற்றும் அதற்கு ஏற்ப ஜூவல்ஸ் வாங்குவதும் எளிதல்ல. அதுமட்டுமில்லாமல் மேக்கப்களில் பலவகை இருந்தாலும், இன்றளவில் நோ மேக்கப் லுக் அதிகம் ஈர்க்க கூடியதாக உள்ளது. குறைந்த நேரத்தில் அழகாக ஒரு பார்ட்டி லுக் மேக்கப் செய்வது குறித்து விளக்குகிறார் அழகு கலை நிபுணர் சத்யா.

செயல்முறை :

முதலில் முகத்தில் டஸ்ட் எதுவும் இல்லாதவாறு, ஈரத்துணி வைத்து துடைக்க வேண்டும். அடுத்ததாக முகம் மற்றும் கழுத்து பகுதியில் டோனர் அப்ளை செய்ய வேண்டும். இதன்மூலம் ஓபன் போர்ஸ் மறைவதுடன் மேக்கப் அழியாமல் லாங் ஸ்டே இருக்கும்.

டோனர் முகத்தில் செட் ஆனதும், ஜெல் ப்ரைமரி அப்ளை செய்ய வேண்டும். ஜெல் ப்ரைமரி போடுவதால் மேக்கப் நல்ல ஒரு மேட் பினிஷ் லுக் கொடுக்கும்.


தேவையான இடத்தில் ஆரஞ்சு கரெக்டர் டேப் செய்யும் காட்சி 

முகத்தில் இருக்கும் சன்-டேன், முகப்பரு தழும்பு உள்ளிட்டவற்றை மறைக்க ஆரஞ்சு கரெக்டர் பயன்படுத்தி டேப் செய்ய வேண்டும். ஆரஞ்சு கரெக்டரை அழுத்தம் கொடுத்து அப்ளை செய்வதை தவிர்க்க வேண்டும்.

அடுத்ததாக டெண்டர் கிரீம் அப்ளை செய்ய வேண்டும். ஸ்கின் டோனுக்கு ஏற்ற கலரில் தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ள வேண்டும். பிரஷ் வைத்து முகம் மற்றும் கழுத்து முழுவதும் நன்கு டேப் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஸ்பாஞ்சில் செட்டிங் ஸ்பிரே அடித்து நன்கு டேப் செய்ய வேண்டும்.

ஸ்பிரே நன்கு செட் ஆனதும், லூஸ் பவுடர் வைத்து மேக்கப்பை செட் செய்ய வேண்டும். அடுத்ததாக பவுடர் காண்டோர் செய்ய வேண்டும். பிரஷ்ஷில் காண்டோர் பவுடர் தேவைக்கேற்ப எடுத்து கன்னம், மூக்கு, தாடை, நெற்றி பகுதிகளை காண்டோர் செய்ய வேண்டும்.

டிரஸ் கலருக்கு ஏற்ப பிளஷ் எடுத்து கன்னத்தில் அப்ளை செய்ய வேண்டும். அடுத்ததாக ஹைலைட்டர் தேவையான இடங்களில் அப்ளை செய்ய வேண்டும்.


ஜெல் லைனர் பயன்படுத்தி கண்களில் லைனர் போடும் முறை 

ஐ மேக்கப் போடுவதற்கு ஐ-ஷேடோவில் பவுடரில் லைட் கலர் எடுத்து பிரஷ் வைத்து அப்ளை செய்ய வேண்டும். க்ளிட்டர் ஐ-ஷேடோவில் ஒயிட் கலர் எடுத்து அப்ளை செய்ய ஐ-லுக் நன்றாக இருக்கும். அடுத்ததாக ஜெல் ஐ-லைனர் போட வேண்டும். லைனர் காய்ந்ததும், பிளாக் கலர் பவுடர் பயன்படுத்தி ஸ்மோக்கி ஐ-லுக் செய்யலாம். இவ்வாறு செய்யும்போது நேச்சுரல் லுக் கிடைக்கும். அடுத்ததாக புருவங்களில் இருக்கும் இடைவெளியை நிரப்பிவிட வேண்டும். காஜல் மற்றும் ஐ-லேஷ் வைத்தால் ஐ-மேக்கப் முடிந்தது.


டிரஸ் கலருக்கு ஏற்ப லிப்ஸ்டிக் தேர்வு செய்து போடுதல்

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்னர் லிப் லைனர் போட்டால் நல்ல ஃபினிஷிங் கிடைக்கும். ஜூவல்ஸ் போட்டு, இறுதியாக பொட்டு வைத்து, ஃபிக்சிங் ஸ்பிரே அடித்தால் பார்ட்டி லுக் மேக்கப் முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்