ரோசாசியாவை குறைக்கும் அவல் ஃபேஸ் பேக்!

அடிக்கடி அரிப்பு ஏற்பட்டு முகம் சிவந்துவிடும். திறந்த துளைகள் அதிகம் இருக்கும். அடிக்கடி வெள்ளை சீழ் வெளிவரும் என்று அழகுக்கலை நிபுணர் வசுந்தரா கூறியுள்ளார்.

Update: 2023-11-20 18:30 GMT
Click the Play button to listen to article

ரோசாசியா என்பது முகத்தில் அல்லது உடலில் இளஞ்சிவப்பாக அலர்ஜி போல் இருப்பது ஆகும். இந்த ரோசாசியா இருப்பவர்கள் அவ்வளவு எளிதாக க்ரீம், ஃபேஸ் பேக் போன்றவற்றை பயன்படுத்த முடியாது. குறிப்பாக இந்த ரோசாசியா இருப்பவர்களின் தோல் உலர்ந்து இருக்கும். அடிக்கடி அரிப்பு ஏற்படும். அதிக திறந்த துளைகள் இருக்கும். அடிக்கடி வெள்ளை சீழ் வெளிவரும் என்று அழகுக்கலை நிபுணர் வசுந்தரா கூறியுள்ளார். மேலும் இந்த ரோசாசியா வருவதற்கான காரணங்கள் என்ன? இதை குறைப்பதன் வழிகள் என்ன? என்பதையும் விளக்கியுள்ளார்.

ரோசாசியா ஏற்படுவதற்கான காரணங்கள்

வெயிலினாலும், தண்ணீர் மாறுபாட்டாலும், உட்கொள்ளும் உணவினாலும், பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களாலும், வாசனை திரவியங்களாலும் ஒவ்வாமை (Allergy) ஏற்பட்டு அந்த ஒவ்வாமையிலிருந்து ரோசாசியாவானது ஏற்படுகிறது.


ரோசாசியா எனப்படும் அலர்ஜி

ரோசாசியாவை குறைப்பது எப்படி?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் இந்த ரோசாசியா நோயை குறைக்கலாம். அதற்கு முக்கியப்பொருளாக இருப்பது அவல் என்று அழைக்கப்படும் ஓட்ஸ். ஓட்ஸில் குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பதால் இது ராஷஸ் மற்றும் அலர்ஜிக்களை நீக்கி சருமத்தை மென்மையாக்கும்.

ரோசாசியாவை குறைக்கும் அவல் ஃபேஸ் பேக்

அவலை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அதில் கொஞ்சம் பால் ஊற்றி அவல் மசியும் தன்மை வரும் வரை வேக வைக்க வேண்டும்.


சந்தனம், அவல் ஃபேஸ் பேக்கிற்கு தேவையான பொருட்கள்

வேகவைத்த அவலில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த தேன் மற்றும் ரோஜா இதழ்கள் தூளை சிறிதளவு சேர்த்து கலக்கி பேக் போல் செய்துகொள்ள வேண்டும்.

பேக் தயார் செய்யப்பட்ட நிலையில், காய்ச்சாத பச்சை பாலை ஒரு காட்டன் பயன்படுத்தி முதலில் முகத்தை நன்றாக கிலென்ஸ் செய்ய வேண்டும்.

அடுத்த கட்டமாக இந்த ஃபேஸ் பேக்கை முகம் முழுவதும் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த பேக்கை தோள், நெஞ்சு பகுதி என்று எங்கெல்லாம் ரோசாசியா இருக்கிறதோ அதாவது எங்கெல்லாம் இளஞ்சிவப்பாக இருக்கிறதோ அங்கெல்லாம் தடவிக் கொள்ளலாம்.


ஃபேஸ் பேக்கை தடவும் முறை

இந்த பேக்கை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை தினமும் பயன்படுத்தாமல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற கணக்கில் ஒரு வாரத்திற்கு 2 அல்லது 3 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதேபோல் இதை வெயிலில் செல்வதற்கு முன்னர் தடவிக் கொள்ளலாம் அல்லது வெயிலில் சென்று வந்த பின் தடவலாம்.

இப்படி இதை தொடர்ந்து செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ரோசாசியா குறையும்.

Tags:    

மேலும் செய்திகள்