முடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு! - இதை ட்ரை பண்ணுங்க!

Update:2024-09-17 00:00 IST
Click the Play button to listen to article

தூக்கமின்மை, உணவு முறை மாற்றம், ஸ்ட்ரெஸ் என பல காரணங்களால் முடி தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. அத்துடன் இளம் வயதிலேயே இளநரை வருவதால் பலருக்கும் தன்னம்பிக்கை குறைகிறது. இதன்மூலம் அவர்களின் அன்றாட வேலை கூட பாதிக்கப்படுகிறது. இதற்கு இன்ஸ்டன்ட் தீர்வு காண இன்றைய தலைமுறையினர் முயல்கின்றனர். ஆனால், இன்ஸ்டன்ட் ரெமிடிஸ் மூலம் நிரந்தர பலன் கிடைக்காது. அதேபோல் இன்ஸ்டன்ட் ரெமிடிஸ்களால் பக்க விளைவுகளும் வரும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் இளநரை, வழுக்கை, புழுவெட்டு என அனைத்து கேசப் பிரச்சினைகளுக்கும் இரண்டு ஹேர் பேக் & ஹேர் ஆயில் என்று சில ஹோம் ரெமிடிஸ் சொல்லிக்கொடுத்து விளக்கமளிக்கிறார் அழகு கலை நிபுணர் ப்ரியா.

கருமையான கூந்தலுக்கான ஹேர் பேக் செய்யும் முறை :

முதல் ஹேர் பேக் செய்ய 4 செம்பருத்தி பூக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், வேப்பிலை ஒரு கொத்து, செம்பருத்தி இலை, மருதாணி இலை, கறிவேப்பிலை, சிறிதளவு தயிர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ள வேண்டும்.


கருமையான நீண்ட கூந்தலுக்கான ஹேர் பேக் 

ஹேர் பேக் அப்ளை செய்வதற்கு முன்பு, தலையில் தேங்காய் எண்ணெய்யை தேய்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் முடியை ஒவ்வொரு லேயராக பிரித்து, அரைத்து வைத்துள்ள ஹேர் பேக்கை கொஞ்சம் கொஞ்சமாக அப்ளை செய்து காய்ந்த பிறகு நல்ல ஷாம்பு பயன்படுத்தி தலையை வாஷ் செய்ய வேண்டும்.

இதன் மூலம் தலை முடி நன்கு வழுவழுப்பாக இருக்கும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கறிவேப்பிலை முடிக்கு நல்ல கருமையை தருகிறது. வாரத்தில் ஒரு முறையாவது அதை பயன்படுத்துவது நல்லது.

இளநரையை போக்கும் ஹேர் ஆயில் செய்யும் முறை :

ஒரு மிக்ஸி ஜாரில் வேம்பாளம் பட்டை 10 கிராம், கறிவேப்பிலை ஒரு கொத்து மற்றும் செம்பருத்தி இலைகள் 4 முதல் 6 வரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.


ஹேர் ஆயில் செய்ய தேவையான பொருட்கள் 

மேலும் இதனுடன் ஆவாரம் பூ 25 கிராம், ரோஜா இதழ்கள் 25 கிராம், வேப்பம்பூ 10 கிராம், வெட்டிவேர் சிறிதளவு, வேப்பிலை ஒரு கொத்து என சேர்த்துக்கெண்டு தண்ணீர் சிறிதளவு ஊற்றி மைய அரைத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதை வடகம் தட்டுவது போல தட்டி, நிழலில் காயவைத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தலைக்கு தேய்த்து குளித்துவர இளநரை விரைவில் குணமாகும்.

மூலிகை ஹேர் பேக் செய்யும் முறை :

குப்பைமேனி இலை, அவுரி இலை, நிலவேம்பு, தயிர், எலுமிச்சை சாறு, வேப்பிலை ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். முடி கருக்க கறிவேப்பிலை மற்றும் செம்பருத்தி இலையை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தலைக்கு குளிப்பதற்கு முன்னால் இதனை முடியில் அப்ளை செய்து 30 முதல் 45 நிமிடங்களுக்கு பிறகு நல்ல ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

மூலிகை ஹேர் பேக் போடுவதால் தலையில் வழுக்கை வருவதை தடுக்க முடியும், புழுவெட்டு, பொடுகு போன்ற பிரச்சனைகளும் தீரும்.


வழுக்கை ஏற்பட்ட தலைக்கு மூலிகை ஹேர் பேக் 

இந்த இரண்டு ஹேர் பேக் மற்றும் ஹேர் ஆயிலை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பிரச்சினைகளும் குணமாவதுடன், கேசமும் நீளமாக வளரும்.

Tags:    

மேலும் செய்திகள்