முகம் பளிச்சென்று தெரியவேண்டும்! - இஸ்லாமிய மணப்பெண் அலங்காரம் செய்வது எப்படி?

பொதுவாக மணப்பெண்களுக்கு முகம் மட்டும்தான் வெளியே தெரியும்படி இருப்பதால், முகம் பளிச்சென இருக்கும்படி மேக்கப் போடவேண்டும். அதேபோல் ப்ரைட் நிறங்களில்தான் திருமண உடையும் இருக்கும் என்பதால், முகத்திலும் கோல்டன், ரெட் போன்ற பளிச் ஷேடுகள் இருந்தால் அலங்காரம் முழுமைபெறும்

Update:2024-05-28 00:00 IST
Click the Play button to listen to article

மும்மதங்களின் மணப்பெண் அலங்காரம் குறித்து தொடர்ச்சியாக பார்த்துவருகிறோம். ஏற்கனவே கிறிஸ்தவ மற்றும் இந்து திருமணங்களின் மணப்பெண் மேக்கப் எப்படி செய்வது என்பது குறித்து பார்த்தோம். இந்த வாரம் நிக்காஹ் என்று சொல்லக்கூடிய இஸ்லாமிய திருமணத்தில் மணப்பெண்களுக்கு செய்யப்படும் மேக்கப் குறித்துதான் பார்க்கப்போகிறோம். பிற மத திருமணங்களுடன் ஒப்பிடுகையில் இஸ்லாமிய திருமணங்களில் ஒப்பனையும், நகை அலங்காரமும் சற்று அதிகமாகவே இருக்கும். பொதுவாக மணப்பெண்களுக்கு முகம் மட்டும்தான் வெளியே தெரியும்படி இருப்பதால், முகம் பளிச்சென இருக்கும்படி மேக்கப் போடவேண்டும். அதேபோல் ப்ரைட் நிறங்களில்தான் திருமண உடையும் இருக்கும் என்பதால், முகத்திலும் கோல்டன், ரெட் போன்ற பளிச் ஷேடுகள் இருந்தால் அலங்காரம் முழுமைபெறும் என்கிறார் அழகுக்கலை நிபுணர் லலிதா.


புருவங்களை வரைந்து ஃபில்லிங் கொடுத்தல்

மேக்கப் போடுவதற்கு முதலில் க்ளென்சிங் செய்ய டோனர் அப்ளை செய்யவேண்டும். அடுத்து மாய்ச்சுரைசர் போட்டுவிட்டு ப்ரைமர் போடலாம். வறண்ட சருமத்திற்கு அதிகமாகவும், எண்ணெய் சருமத்திற்கு சற்று குறைவாகவும் மாய்ச்சுரைசர் போடவேண்டும். இல்லாவிட்டால் சீக்கிரத்தில் எண்ணெய்வடிய ஆரம்பித்துவிடும். ப்ளெண்டரால் ப்ரைமரை கொஞ்சம் கொஞ்சமாக தொட்டு முகம் மற்றும் கழுத்து முழுக்க தடவேண்டும். 


கண்களுக்கு மேல் ப்ரைட் கலரில் ஐஷேடோ போடுதல்

அதன்பிறகு புருவங்களை சற்று அடர்த்தியாக வரையவேண்டும். பொதுவாக இஸ்லாமிய திருமணங்களின்போது த்ரெட்டிங் செய்யமாட்டார்கள் என்பதால், அதை வரைந்துதான் சரிசெய்யவேண்டும். அதற்கு முதலில் ஷேப் செய்து பிறகு உள்ளே ஃபில்லிங் செய்யவேண்டும்.

முகம் மற்றும் கண்களைச்சுற்றி கரும்திட்டுகள் இருந்தால் அதனை கன்சீலர் பயன்படுத்தி கவர் செய்யவேண்டும். கன்சீலர் பயன்படுத்தியபிறகு, அது வழிந்து வராமல் இருக்க லூஸ் பவுடர்கொண்டு அதை tap செய்யவேண்டும்.


காண்டோர் மற்றும் ஃபவுண்டேஷன் ஸ்டிக்கால் வரைந்து ப்ளெண்ட் செய்தல்

அடுத்து ஐஷேடோ போடவேண்டும். கண்களை மூடிக்கொண்டு முதலில் வெளிப்புறத்தை வரைந்து பின்பு உள்ளே நிரப்பவேண்டும். கண்கள் தொடங்கும் இடத்தில் பளபளப்பாக தெரிய சிறிது க்ளிட்டர் பூசவேண்டும். அதேபோல் புருவத்திற்கு கீழும் அதே க்ளிட்டர் ஷேடை கொடுக்கவேண்டும். பிறகு செயற்கை ஐ-லாஷ்களை ஒட்டி, செட் செய்யவேண்டும். அதன்பின்னர் ஐலைனர் போட்டால் ஐமேக்கப் முடிந்துவிடும்.

ஒட்டிய ஐ-லாஷ் காய்வதற்குள் காண்டோர் மற்றும் ஃபவுண்டேஷன் ஸ்டிக் கொண்டு முக அமைப்புக்கு ஏற்றவாறு வரைந்து அதனை ப்ளெண்ட் செய்யவேண்டும். சிலருக்கு மூக்கு அமைப்பு சரியாக இல்லையென்றால் ஷார்ப்பாக காண்டோர் செய்யவேண்டும். அதேபோல் நெற்றி, தாடைப்பகுதிகளிலும் காண்டோர் செய்யவேண்டும்.


மூக்கு போன்ற ஷார்ப்பான பகுதிகளில் காண்டோர் செய்தல்

அடுத்து காம்பாக்ட் பவுடர் போட்டுவிட்டு லூஸ் பவுடர் போடவேண்டும். முடிந்தவரை இதனை பெரிய ப்ரஷ் கொண்டு போட்டால் முகத்தில் நன்றாக செட்டாகும். கடைசியாக நெற்றி, கன்னங்கள், தாடைப்பகுதிகளில் ஷிம்மர் அல்லது ப்ளஷ் போட்டு ப்ளெண்ட் செய்யவேண்டும்.

முகத்திற்கான மேக்கப் முடிவதற்குள் ஐ-லாஷ் காயந்திருக்கும். அதன்பிறகு கண்களின் கீழ்ப்பகுதியில் காஜல் கொண்டு வரையவேண்டும். அதன்கீழ் ஐஷேடோவைக்கொண்டு லைட்டாக ஃபில்லிங் கொடுக்கவேண்டும்.


லிப் லைனரால் வரைந்து லிப்ஸ்டிக் போடுதல்

அடுத்து உதட்டிற்கு லிப்-பாம் போட்டுவிட்டு, லிப் லைனர் கொண்டு உதடுகளின் ஓரங்களில் உடையின் நிறத்திற்கு ஏற்றவாறு அவுட்லைன் வரையவும். பிறகு லிப்ஸ்டிக் போட்டுவிட்டு கடைசியாக செட்டிங் ஸ்ப்ரே அடித்தால் மேக்கப் முழுவதும் முடிந்துவிடும்.

Tags:    

மேலும் செய்திகள்