ஷைனிங்கான முடிவேண்டுமா? அதற்கு வீட்டிலேயே ஹேர் ஸ்பா செய்தாலே போதும்!

ஹேர் ஸ்பாவுடன் எண்ணெயை சேர்த்தாலும் ஸ்பா செய்து முடித்துவிட்டு முடியை கழுவிய பிறகு எண்ணெய் பயன்படுத்தியதைப் போன்று இருக்காது. அதேசமயம் முடிக்கு ஈரத்தன்மையையும் (moisture) கொடுக்கும்.

Update: 2024-04-08 18:30 GMT
Click the Play button to listen to article

அன்றாடம் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் தன்னைத்தானே பராமரித்துக்கொள்ளவே நேரம் இல்லை என்பவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பலரும் தலைமுடிக்கு கொடுப்பதில்லை. தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள சில சிம்பிளான பராமரிப்பை மேற்கொண்டாலே போதும் என்கிறார் அழகுக்கலை நிபுணர் சத்யா. குறிப்பாக, வறண்ட, சிக்கான மற்றும் பொடுகு போன்ற பல பிரச்சினைகள் இருக்கும் தலைமுடிக்கு ஹேர் ஸ்பா என்ற ஒரே ஒருமுறையை பின்பற்றினாலே போதும். அவை அனைத்திலிருந்தும் விடுபடலாம் என்கிறார். ஹேர் ஸ்பா எப்படி செய்தால் முழுமையான ரிசல்ட் கிடைக்கும் என்பதை செய்துகாட்டுகிறார் அவர்.

ஹேர் ஸ்பா செய்வதற்கு வெறும் க்ரீம் மட்டும் பயன்படுத்தாமல் அதனுடன் dandruff சீரம் அல்லது hair fall சீரம் பயன்படுத்தி செய்தால் நன்றாக இருக்கும்.


ஈரமான தலைமுடியை பகுதிகளாக பிரித்தல் - கீழ்ப்பகுதியிலிருந்து ஸ்பா க்ரீமை ப்ரஷ்ஷால் தடவுதல்

முடி உதிர்வு இருப்பவர்களுக்கு ஹேர் ஸ்பா க்ரீமுடன் முருங்கை விதை எண்ணெயை பயன்படுத்தலாம். இதனால் பொடுகுத்தொல்லை நீங்கும். முடி உதிர்வு குறையும். வறண்ட முடியையும் மிருதுவாக்கும்.

முதலில் முடியின் அளவிற்கு ஏற்றவாறு ஹேர் ஸ்பா க்ரீம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் முருங்கை விதை எண்ணெயை சேர்த்து நன்கு கலக்கவும். சிலர் மிகவும் காஸ்ட்லியாக மரக்கன்று எண்ணெயை பயன்படுத்துவார்கள்.

ஹேர் ஸ்பாவுடன் எண்ணெயை சேர்த்தாலும் ஸ்பா செய்து முடித்துவிட்டு முடியை கழுவிய பிறகு எண்ணெய் பயன்படுத்தியதைப் போன்று இருக்காது. அதேசமயம் முடிக்கு ஈரத்தன்மையையும் (moisture) கொடுக்கும்.


தலைமுடியை ஈரமாக்க வாட்டர் ஸ்ப்ரே செய்தல் - ஸ்பா க்ரீமை தலைமுழுவதும் நன்கு தடவுதல்

தலைக்கு குளித்துவிட்டு பிறகு ஹேர் ஸ்பா செய்வதற்கு முடியை நான்கு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும்.

முடியை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து ஸ்பா க்ரீமை தலையின் கீழ்ப்பகுதியிலிருக்கும் முடியிலிருந்து தடவவேண்டும். அப்படி தடவும்போது முடியின் அடி முதல் நுனி வரை நன்றாக தடவுவது அவசியம்.

இப்படி பிரித்து வைத்திருக்கும் ஒவ்வொரு பகுதிகளில் இருக்கும் முடியையும் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து நன்கு சீவிவிட்டு தலைமுழுவதும் ஸ்பா க்ரீமை நன்கு தடவவேண்டும். தலைமுடி ஈரமாக இருந்தால்தான் ஸ்பா க்ரீம் முடியில் நன்கு ஒட்டும்.


ஸ்பா க்ரீம் தடவி மசாஜ் கொடுத்தல் - க்ரீம் தடவிய தலைமுடியை பேக் செய்து வைத்தல்

ஒருமுறை ஸ்பா செய்தாலே முடிகொட்டுதல் குறைந்துவிடும். அதனால் உடனே ஸ்பா எடுப்பதை விட்டுவிடக்கூடாது. முடி கொட்டுதல் பிரச்சினை அதிகம் இருப்பவர்கள் குறைந்தது ஆறு முறையாவது ஸ்பா செய்தால்தான் முழுமையான ரிசல்ட் கிடைக்கும். முடி கொட்டுதல் நின்று முடியும் மிருதுவாகும்.

தலைமுழுவதும் ஸ்பா க்ரீமை தடவியபிறகு, மிச்சமிருக்கும் க்ரீமை உச்சந்தலையில் தடவிவிடலாம். ஏனெனில் நிறையப்பேருக்கு பெரும்பாலும் உச்சந்தலைதான் வறண்டு இருக்கும்.

தலையிலிருந்து முடியின் நுனிவரை க்ரீமை தடவியபிறகு தலைக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவேண்டும். ஆயில் மசாஜ் செய்வது போன்று அழுத்தம் கொடுக்கக்கூடாது. ரிலாக்ஸ் செய்வதற்காக நெற்றியின் மேற்பகுதியிலிருந்து காதின் பின்பகுதிவரை விரல்நுனியால் மசாஜ் கொடுக்கலாம். பிறகு கழுத்தின் பின்பகுதியிலிருந்து உச்சந்தலை வரையிலும், பிறகு மேலிருந்து கீழாக சர்குலர் வடிவிலும் மசாஜ் கொடுக்கலாம்.


கழுத்துப்பகுதிக்கு மசாஜ் கொடுத்தல் - ஸ்பா க்ரீம் தடவிய முடியை ஸ்டீம் செய்தல்

மசாஜ் கொடுக்கும்போது தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மனதும் ரிலாக்ஸ் ஆகும். முருங்கை விதை எண்ணெயை பயன்படுத்துவதால் உடல்சூடும் குறையும். இதனால் முடி கொட்டுதலும் தானாகவே குறைந்துவிடும். ஸ்பா மசாஜில் அழுத்தம் கொடுக்கவோ அல்லது டாப் (tap) செய்யவோ கூடாது.

பொதுவாகவே ஸ்பா செய்யும்போது வலிமை இல்லாத முடியானது கையோடு வந்துவிடும். தலைக்கு மசாஜ் முடித்துவிட்டு கழுத்துப்பகுதிக்கும் மசாஜ் கொடுத்தால் உடலும் மனமும் நன்றாக ரிலாக்ஸ் ஆகிவிடும். அதேபோல் உடல் வெப்பமானது விரல்கள் வழியாக வெளியேறும்விதமாக தோள்பட்டையிலிருந்து விரல்வரை மசாஜ் கொடுக்கவேண்டும்.


ஸ்பா க்ரீமை கழுவிய பிறகு ட்ரயர் கொண்டு தலைமுடியை ட்ரை செய்தல்

தலை முழுவதும் மசாஜ் கொடுத்து பேக் செய்திருக்கும் முடிக்கு ஸ்டீம் கொடுக்கவேண்டும். ஸ்டீமரை ஒரே இடத்தில் வைக்காமல் ஆவி தலைமுழுவதும் படுமாறு 3 முதல் 5 நிமிடங்கள்வரை ஸ்டீம் கொடுக்கவேண்டும். ஸ்டீமரை தலைக்கு மிக அருகில் கொண்டுசெல்லக்கூடாது.

ஸ்டீம் செய்யும்போது தலையிலிருக்கும் சரும துவாரங்கள் நன்றாக திறக்கும். இது முடிவளர்ச்சியை அதிகரிக்கும். முடியும் வலிமையாகும். ஸ்டீமர் இல்லாதவர்கள் ப்ளாஸ்டிக் கவரால் தலைமுழுவதையும் சுற்றி வைக்கலாம்.

ஸ்டீம் செய்தபிறகு 5 நிமிடங்கள் அப்படியே வைக்கவேண்டும். பிறகு முடியை குளிர்ந்தநீரால் கழுவவேண்டும். ஸ்பா செய்துவிட்டு முடியை கழுவும்போது ஷாம்பூ பயன்படுத்தக்கூடாது. நன்றாக கழுவியபிறகு டவலைக்கொண்டு ஈரமில்லாமல் துடைக்கவும். குறிப்பாக, ஸ்கால்ப்பில் 80 சதவீத ஈரத்தை டவலைக்கொண்டுதான் துவட்ட வேண்டும்.


ஹேர் ஸ்பா செய்தபிறகு மிருதுவாக மாறியிருக்கும் தலைமுடி

அதிக ஈரத்துடன் இருக்கும்போது ட்ரயர் பயன்படுத்தக்கூடாது. முடியையும் டவலால் நன்கு ஒற்றி எடுத்து பின்னர் ட்ரயர் பயன்படுத்தி ஈரம் போகும்வரை ட்ரை செய்யவும். தலைமுடி முழுவதும் நன்றாக காய்ந்தபிறகு பெரிய ஹேர் ப்ரஷ்ஷால் சிக்கில்லாமல் சீவி, மீண்டும் ட்ரயர் பயன்படுத்தினால் முடி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்