கலக்கல் கர்லி ஹேர் ஸ்டைல் எப்படி செய்யலாம்! கிறிஸ்டியன் மெட்டர்னிட்டி ஹேர் ஸ்டைல்!

சிகை அலங்காரத்திற்கு சில கெமிக்கல் ஸ்பிரே செய்வது, சீரம், ஜெல், ஹேர் ப்ரொடெக்டர் பல பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கூந்தல் வறட்சி, உதிர்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் வரக்கூடும்.

Update:2024-06-11 00:00 IST
Click the Play button to listen to article

கிறிஸ்தவ மணப்பெண்களுக்கான சிகை அலங்காரம் பலவிதங்களில் உள்ளன. மற்ற மதங்களை ஒப்பிடுகையில் கிறிஸ்தவ மணப்பெண்களுக்கான உடை, மேக்-அப் லுக், சிகை அலங்காரம் என அனைத்தும் சற்று வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் கிறிஸ்தவ மெட்டர்னிட்டி ஃபோட்டோ ஷூட்டுக்கான கர்லி ஹேர் லுக் எப்படி செய்யலாம் என சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் அழகு கலை நிபுணர் லலிதா.

செயல்முறை:


கர்லிங் ஹேர் ஸ்டைல் செய்ய முடியை பல பகுதிகளாக பிரிக்கும் காட்சி 

* முதலில் தலை முடியை சிக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஹேர் மூஸ் அப்ளை பண்ண வேண்டும். கர்லி ஹேர் ஸ்டைல் செய்யும்போது மூஸ் அப்ளை செய்தால் சிறந்த லுக் கிடைக்கும். மூஸ் அப்ளை பண்ணும்போது முடி பார்க்க வால்யூம் அதிகமாக தெரியும்.

 * மூஸ் அப்ளை செய்த பிறகு முடியை மூன்று அல்லது நான்கு பகுதிகளாக பிரித்து தனித்தனியாக கிளிப் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

* அடிப்பக்கம் இருக்கும் முடியை மூன்றாக பிரித்து, ப்ளோ ட்ரையர் வைத்து பாதி முடியை மட்டும் ப்ளோ ட்ரை செய்யத்தபின், கர்லர் வைத்து மீதமுள்ள பாதி முடியை சுருட்டி 2 நிமிடங்களுக்கு வைத்தெடுத்து செட்டிங் ஸ்பிரே அடிக்க வேண்டும்.


முடியை கர்லிங் மெஷின் மூலம் கர்லிங் செய்யும் முறை 

* அடுத்ததாக ஸ்பிரே அடித்த முடியை இரண்டு அல்லது மூன்றாக பிரித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது பார்ப்பதற்கு அழகாகவும், அடர்த்தியாகவும் இருக்கும்.

* மீதமுள்ள முடி அனைத்தையும் இதே மாதிரியாக செய்ய வேண்டும். பின்னர் முன்னாள் உள்ள முடியை சிறிய பஃப் போல வைத்து, ஹேர்பின் போட வேண்டும். மேல் நெற்றி முடியை சிறிதாக எடுத்து கர்ல் செய்ய கிறிஸ்டியன் மெட்டர்னிட்டி லுக் பார்ப்பதற்கு அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கும்.


முடியை ப்ளோ ட்ரை செய்யும் காட்சி 

 கூந்தலை பராமரிக்க செய்ய வேண்டியவை:

* கூந்தல் பராமரிப்பில் ஊட்டச்சத்து மிகவும் அவசியம். எனவே வைட்டமின் ஏ, ஈ , சி , ஜிங்க், இரும்பு சத்து நிறைந்த உணவுகளை அன்றாடம் எடுத்துக் கொள்வது அவசியம்.

* தலைக்கு குளித்து வந்த உடனே சீப்பை வைத்து வாருவது தவறு! ஈரம் நிறைந்திருக்கும் போது தலைமுடி பலவீனமாக இருக்கும். அப்போது சீப்பை வைத்து வாரினால் முடி எளிதில் உடைந்து வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

* கெமிக்கல் நிறைந்த ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்த்து விடுவது நல்லது. அதற்கு பதிலாக வீட்டிலேயே சியக்காய் பொடி வைத்து தலைக்கு குளிப்பது நல்லது.

* வாரத்திற்கு ஒரு முறை இயற்கையான ஹேர் மாஸ்க்குகள் பயன்படுத்துவது கூந்தலுக்கான ஈரப்பதத்தையும், தேவையான ஊட்டத்தையும் கொடுக்கும்.

இன்றைய காலகட்டத்தில் சிகை அலங்காரத்திற்கு கெமிக்கல் ஸ்பிரேக்கள், சீரம், ஜெல், ஹேர் ப்ரொடெக்டர் என பல பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் கூந்தல் வறட்சி, உதிர்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் வரக்கூடும். சிலருக்கு முடியில் பிளவுபட்ட முனைகள் இருக்கும். கூந்தலின் நுனி பகுதி வறண்டு விடுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. எனவே அடிக்கடி நுனிப்பகுதியை வெட்டிவிட்டால், அது கூந்தலின் வளர்ச்சிக்கு தூண்டுதலாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்