சுலபமான மணப்பெண் கொண்டை ஹேர் ஸ்டைல்!

கண்களில் படாமல் தலையில் ஷைன் ஸ்ப்ரே அடிக்க வேண்டும். இது அடிப்பதால் ஹேர் ஸ்டைல் நீண்ட நேரம் கலையாமலும் தூரத்திலிருந்து பார்க்கும்போது ஹேர் ஸ்டைல் பளபளப்பாகவும் தெரியும்.

Update:2024-01-09 00:00 IST
Click the Play button to listen to article

‘கொண்டையில்…தாழம்பூ…நெஞ்சிலே…வாழைப்பூ…’ என 90 களில் மணப்பெண் என்றாலே கொண்டையும் லோலாக்கும் புடவையும்தான் மிக ட்ரெண்டாக இருந்து வந்தது. காலங்கள் மாற மாற கொண்டை லூஸ் ஹேராகவும், லோலாக்கு ஸ்டட்டாகவும், புடவை மாடர்ன் ட்ரெஸ்ஸாகவும் மாறிவிட்டது. ஆனால், தற்போதோ மறைந்ததெல்லாம் மீண்டும் எழும் வகையில் மணப்பெண்கள் பலரும் புடவைக்கும் லோலாக்குக்கும் குறிப்பாக கொண்டைக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மணப்பெண்கள் விரும்பும் இந்த கொண்டை ஹேர்ஸ்டைலில் பல விதங்கள் உள்ளன. அவற்றில் ஒரு விதமான கொண்டை ஹேர் ஸ்டைல் போடுவதெப்படி என்பதை ஒப்பனை கலைஞர் சத்யா பகிர்ந்ததை காணலாம்.


தலைமுடியை க்ரிம்ப் செய்தல்

ஹேர் ஸ்டைல் செய்வதற்கு முதலில் முடியை நன்கு சிக்கு எடுத்துவிட்டு பின்னர் பகுதி பகுதியாக பிரித்து கிரிம்ப் செய்ய வேண்டும்.

முடியை கிரிம்ப் செய்வதன் மூலம் முடி நமக்கேற்றவாறு இருப்பதுடன் நாம் விரும்பும் வகையில் ஹேர் ஸ்டைலும் செய்து கொள்ளலாம்.

முன் முடியையும் பின் முடியையும் கிரிம்ப் செய்த பின்னர் முன் பகுதியில் வகிடெடுத்து முடியை இரண்டாக பிரித்து கொள்ள வேண்டும்.

அடுத்து பின் முடியை சிறு சிறு பகுதிகளாக பிரித்து பேக் கோம்ப் செய்து பஃப் அமைத்து மைல்டாக ஹேர் ஸ்ப்ரே அடித்து ஸ்லைடுபின் போட்டு பஃப்பை செட் செய்து கொள்ளலாம்.


பேக் கோம்ப் செய்து பஃப் அமைத்தல்

பின்னர் வகிடெடுத்த வைத்த முன் முடியையும் லைட்டாக ஸ்ப்ரே செய்து முதலில் ஒரு பகுதியை வாரி முடியை ட்விஸ்ட் செய்து லைட் பஃப் அமைத்து பின்புறத்திற்கு கொண்டுவந்து ஸ்லைடுபின் குத்த வேண்டும்.

அதேபோல மற்றொரு பகுதியையும் ஸ்ப்ரே போட்டு முடியை வாரி ட்விஸ்ட் செய்து லைட் பஃப் அமைத்து அதையும் பின்புறம் கொண்டு வந்து ஸ்லைடுபின் குத்த வேண்டும்.

அடுத்ததாக மீதி இருக்கும் பின்முடியை வாரி ரப்பர் பேண்ட் பயன்படுத்தி குதிரைவால் போட வேண்டும்.


ஹேர்பன் செட் செய்தல்

 பின்னர் ஹேர்பன் கொண்டு குதிரைவாலினுள் வைத்து அங்கங்கு யூ-பின்னை கிராஸ்ஸாக டைட்டாக குத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து குதிரைவாலை இரண்டாக பிரித்து மேல் பகுதியை தூக்கி பன்னின் மேல் பரப்பியவாறும் கீழ் பகுதியை பன்னின் கீழ் பரப்பி வைத்தும் ஸ்ப்ரே செய்து ரப்பர் பேண்ட் போட வேண்டும்.

பன் அமைத்து மீதம் இருக்கும் முடியை பன் வடிவிலே ரோல் செய்து யூ-பின் குத்தி டைட் செய்து கொள்ள வேண்டும்.


கொண்டைக்குப் பூ வைத்து ஷைன் ஸ்ப்ரே அடித்தல்

 பன் கொண்டையை இன்னும் சிறப்பாக்க, உடைக்கேற்ற அலங்கார பூக்களை பன் மேல் வைத்து அழகுபடுத்திக் கொள்ளலாம்.

இறுதியாக கண்களில் படாமல் தலையில் ஷைன் ஸ்ப்ரே அடிக்க வேண்டும். இது அடிப்பதால் ஹேர் ஸ்டைல் நீண்ட நேரம் கலையாமலும் தூரத்திலிருந்து பார்க்கும்போது ஹேர் ஸ்டைல் பளபளப்பாகவும் தெரியும்.

Tags:    

மேலும் செய்திகள்