"பிரைடல் மேக்கப்" செய்ய 45 நிமிஷம் போதும்! - அழகு கலை நிபுணர் சத்யா

சன்- டேன், ஸ்கின் பிக்மென்ட்டேஷன், ஸ்கின் டிரைனஸ், முகப்பரு என பல பிரச்சனை இருக்கும் சருமத்தில் மேக்-அப் போடும் போது சற்று சிரமம் இருக்கும். டஸ்கி & ட்ரை ஸ்கின் பிரைடல் மேக்-அப்

Update:2024-08-20 00:00 IST
Click the Play button to listen to article

நம்மில் பலரும் கருப்பாக இருப்பதாக எண்ணி தாழ்வு மனப்பான்மையில் இருப்பது உண்டு. அழகு என்பது நிறத்தில் இல்லை. சருமம் எந்த நிறத்தில் இருந்தாலும் சரி, ஆரோக்கியமாக இருக்கிறதா? என்பதுதான் அவசியம். சன்-டேன், ஸ்கின் பிக்மென்ட்டேஷன், ஸ்கின் டிரைனஸ், முகப்பரு என பல பிரச்சினை இருக்கும் சருமத்தில் மேக்-அப் போடும்போது சற்று சிரமமாக இருக்கும். ஆனால், எப்படிப்பட்ட ஸ்கின்னுக்கும் பிரைடல் மேக்கப் அழகாக போடலாம் என சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் அழகு கலை நிபுணர் சத்யா.

செயல்முறை :

மேக்கப் போடுவதற்கு முன்பு முகத்தை ஈரத்துணி வைத்து நன்கு துடைக்க வேண்டும். அடுத்ததாக வாட்டர் ப்ரூஃப் ஜெல் மாய்ச்சுரைசர் அப்ளை செய்ய வேண்டும். இதனால் மேக்கப் போட ஈசியா இருக்கும்.

பிறகு ஜெல் பிரைமர் எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் அப்ளை செய்து கொள்ளலாம். பிரைமர் நன்கு செட்டானதும் ஆரஞ்சு கரெக்ட்டரை பிரஷ் செய்து சீரற்ற சருமத்தை சரி செய்து கொள்ளலாம். பியூட்டி பிளண்டர் வைத்து மேலோட்டமாக டேப் செய்ய வேண்டும்.

டஸ்கி ஸ்கின்னுக்கு ஏற்ற ஃபவுண்டேஷன், 2 ட்ராப் எடுத்து கூடவே ஒரு ஷேட் அதிகம் உள்ள ஃபவுண்டேஷனை 2 ட்ராப் கலந்து கொள்ள வேண்டும். பிரைடல் மேக்கேப் எப்போதும் பிரைட்டாக இருப்பது நல்லது. ஸ்கின்னில் ஃபவுண்டேஷன் நன்கு மெர்ஜாகும்வரை பிரஷ் வைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் டேப் செய்ய வேண்டும். அடுத்ததாக பியூட்டி பிளண்டரை கொண்டு முகம் முழுவதும் டேப் செய்ய வேண்டும்.

செட்டிங் ஸ்பிரே அடித்து காய்ந்ததும், லூஸ் பவுடரில் வெள்ளை மற்றும் மஞ்சள் கலரை சேர்த்து நன்கு கலந்து ஃபவுண்டேஷனை செட் செய்ய வேண்டும். பின்னர் ஹைலைட்டர் பயன்படுத்தி கண்ணை ஹைலைட் செய்துகொள்ளலாம். ஹைலைட் செய்த பிறகு லூஸ் பவுடர் வைத்து செட் செய்ய வேண்டும்.


ஹைலைட்டர் பயன்படுத்தி கண்ணை ஹைலைட் செய்யும் முறை 

அடுத்ததாக ஐ-மேக்கப், முதலில் ஒரு லைட் மெரூன் கலர் ஐ-ஷேடோவை பிரஷ்ஷில் எடுத்து கண்களில் அப்ளை செய்ய வேண்டும். அதற்குமேல் ரெட் கலர் ஐ-ஷேடோவை பிரஷ் வைத்து அப்ளை செய்ய வேண்டும். கோல்டன் கலர் கிளிட்டர் ஐ-ஷேடோவை பயன்படுத்தி ரெட் ஐ-ஷேடோ மீது போட்டு பிரஷ் வைத்து மெர்ஜ் செய்துவிட வேண்டும்.

அடுத்ததாக ஜெல் ஐ-லைனர் பயன்படுத்தி, விங்ஸ் போல லைனர் போட்டுக்கொள்ளலாம். இவ்வாறு போடும்போது ஐ-மேக்கப் லாங் ஸ்டே கொடுக்கும். வாட்டர் லைனில் காஜல் போட்டு, ரெட் ஐ-ஷேடோவை லைட் கோட் கொடுக்க வேண்டும். இறுதியாக ஐ-லேஷ் வைத்தால் ஐ-மேக்கப் முடிந்தது.


கண்களுக்கு கீழே ரெட் ஐ-ஷேடோவை பிரஷ் வைத்து அப்ளை செய்தல்

பின்னர் பவுடர் காண்டோரை தேவையான இடத்தில் செய்து கொள்ளலாம். காண்டோர் செய்த பின்பு கன்னத்தில் பிளஷ் அப்ளை செய்து, பவுடர் ஹைலைட்டரை அதற்குமேல் அப்ளை செய்ய வேண்டும்.


பிரைடல் மேக்கப் லுக் 

அவுட்லைன் வரைந்து லிப்ஸ்டிக் போடுவது நல்லது. புடவை கலருக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு பொட்டு வைக்க வேண்டும். அனைத்தையும் முடித்து இறுதியாக ஃபிக்சிங் ஸ்பிரே அடித்தால், அழகான டஸ்கி ஸ்கின் பிரைடல் மேக்கப் முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்