அரை மணிநேரத்தில் அசத்தலான முகூர்த்தம் லுக் - செய்து காட்டுகிறார் பியூட்டீஷியன் பிரியா

முகூர்த்தத்திற்கு விங்க்டு லைனர் கொடுத்தால் அழகாக இருக்கும். அதனையடுத்து வேண்டுமானால் செயற்கை கண்ணிமைகளை செட் செய்து, மஸ்காரா போடவேண்டும். கடைசியாக கீழே காஜல் கொண்டு வரைந்தால் ஐ மேக்கப் முடிந்துவிடும்.

Update:2024-01-30 00:00 IST
Click the Play button to listen to article

திருமணம் என்றாலே மணப்பெண் அலங்காரம் இல்லாமலா? இது காலங்காலமாக பின்பற்றப்படும் முறை என்றாலுமே காலத்திற்கு ஏற்றாற்போல் மேக்-அப்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ப்ரைடல் மேக்கப் என்பது இப்போது பிஸினஸாகவே மாறிவிட்ட நிலையில் நிச்சயதார்த்தம், கல்யாணம், ரிசப்ஷன் என ஒவ்வொன்றிற்கும் வித்தியாசமான லுக்குகளை செய்துகொள்வதில் மணப்பெண்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். மூகூர்த்தத்திற்கு ஏற்ப அரை மணி நேரத்தில் எப்படி மேக்கப் செய்யலாம் என்பது குறித்து விளக்குகிறார் பியூட்டீஷியன் பிரியா.

எந்தவொரு மேக்கப் போடுவதற்கு முன்பும் CTM செய்யவேண்டும். அதாவது க்ளென்சிங், டோனிங் மற்றும் மாய்ச்சுரைசிங். ஆனால் இந்த முறையில் அதிகம் வியர்க்க வாய்ப்புள்ளது. எனவே டீப் க்ளென்சிங் செய்யாமல் டிஷ்யூ கொண்டு முகத்தை நன்றாக துடைத்தாலே போதுமானது. நீண்ட நேரம் வியர்க்காமல் இருக்க முடிந்தவரை டோனரை தவிர்த்துவிடலாம்.


ஐஷேடோ மற்றும் ஐலைனர் வரைதல்

அடுத்து மாய்ச்சுரைசரை மிகவும் வறண்ட சருமத்திற்கு பயன்படுத்தலாம். சில நேரங்களில் மாய்ச்சுரைசர் தடவியபின் நேரடியாக ஃபவுண்டேஷனை தடவலாம். ஆனால் எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு மாய்ச்சுரைசர் பயன்படுத்தாமல் நேரடியாக ப்ரைமரை பயன்படுத்தலாம்.

தேவைப்பட்டால் மாய்ச்சுரைசர் தடவியபின், முதலில் கண்களுக்கு மேக்கப் போட்டால் நேரம் மிச்சமாகும். முகத்தில் ஆங்காங்கே திட்டு திட்டாக உள்ள கருமையை கன்சீலர் கொண்டு மறைக்கவேண்டும்.

முதலில் கண்ணிமைகளுக்கு மேல் ஐ பேஸ் பூசவேண்டும். பெரும்பாலான முகூர்த்த லுக் என்றாலே பிங்க், ஆரஞ்ச், மெர்ரூன் அல்லது சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். எனவே இந்த நான்கு கலர்கள் அல்லது கோல்டன் ஐ ஷேடோவை பயன்படுத்தலாம். ஐஷேடோ போடும்போது உள்ளிருந்து வெளியே போடவேண்டும். இதனை ப்ளெண்ட் செய்யும்போது தடிமனான ப்ரஷ்ஷை பயன்படுத்த வேண்டும். க்ளிட்டர்களை பயன்படுத்தும்போது தட்டையான ப்ரஷ்ஷை பயன்படுத்த வேண்டும்.


ஃபவுண்டேஷன் மற்றும் காம்பேக்ட் பவுடர் பூசுதல்

அடுத்து புருவம் வரையும்போது கீழே ஓரத்திலிருந்தும் மேலே பாதியிலிருந்தும் வரையவேண்டும். பின்னர் ஐப்ரோ பிரஷ்ஷால் சீவி விடவேண்டும்.

அடுத்து ஐலைனர். முகூர்த்தத்திற்கு விங்க்டு லைனர் கொடுத்தால் அழகாக இருக்கும். அதனையடுத்து வேண்டுமானால் செயற்கை கண்ணிமைகளை செட் செய்து, மஸ்காரா போடவேண்டும். கடைசியாக கீழே காஜல் கொண்டு வரைந்தால் ஐ மேக்கப் முடிந்துவிடும்.

ஏற்கனவே ப்ரைமர் போட்டு, கன்சீல் செய்திருப்பதால் நேரடியாக ஃபவுண்டேஷன் போடலாம். பின்னர் காம்பேக்ட் பவுடரை ப்ரஷ்ஷால் பூசவேண்டும். சருமத்தின் நிறத்திற்கு ஏற்றாற்போல் ஃபவுண்டேஷன் மற்றும் பவுடர் ஷேடுகளை பயன்படுத்துவது நல்லது.


காண்டோர் மற்றும் ஹைலைட்டர் கொண்டு ப்ளெண்ட் செய்தல்

அடுத்து ஹைலைட்டர் கொண்டு கன்னங்கள், மூக்குப்பகுதி மற்றும் வாய்ப்பகுதியைச் சுற்றி ஹைலைட் செய்யவேண்டும். எப்போதும் வெயில் நேரம் அல்லது காலைநேரங்களில் கோல்டன் ஷேடையும், இரவு நேரங்களில் சில்வர் ஷேடையும் பயன்படுத்தினால் மேக்கப் நன்றாக இருக்கும்.

ஹைலைட்டர் பயன்படுத்திய பிறகு எங்கெங்கு வடிவம் கொடுக்கவேண்டுமோ, மூக்கு, டபுள் சின் மற்றும் கன்னங்களில் காண்டோர் செய்யவேண்டும். பொதுவாக குண்டான முகம் கொண்டவர்களுக்கு காண்டோர் பயன்படுத்தலாம். ஏற்கனவே ஒல்லியான முக அமைப்பு கொண்டவர்களுக்கு காண்டோர் தேவையில்லை.


லிப்ஸ்டிக் மற்றும் கண்களுக்கு கீழ் வரைதல்

அடுத்து ப்ளஷ் கொண்டு கன்னங்களின்மீது ப்ளெண்ட் செய்யவேண்டும். முகத்திற்கு மேக்கப் முடிந்தபிறகு உதட்டை வரையவேண்டும்.

முதலில் லிப் பேஸ் பயன்படுத்திவிட்டு, டார்க் ஷேடால் அவுட்லைன் வரைந்து பின்னர் அதைவிட லைட்டர் ஷேட்கொண்டு முழுவதுமாக வரையவேண்டும். உதட்டில் லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது சிரித்தவாறு வரைந்தால் வெடிப்பு ஏற்படாது. கடைசியாக ஐஷேடோ கொடுத்த கலரை பயன்படுத்தி கண்களுக்கு கீழும் ஒரு சிறிய லைன் வரைந்தால் காஜல் வழியாது. லுக்கும் நன்றாக இருக்கும்.

அனைத்து மேக்கப்பும் முடிந்தபிறகு ஃபிக்ஸிங் ஸ்ப்ரே அடித்தால் அரை மணி நேரத்தில் ஹெச்.டி ப்ரைடல் லுக் ரெடி. 

Tags:    

மேலும் செய்திகள்