சிம்பிளான பார்ட்டி லுக்! விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் அபிராமி

பார்ட்டிக்கான லுக் என்பது சிலருக்கு கொஞ்சம் சிக்கலாகத்தான் இருந்து வருகிறது. எனவே பார்ட்டிக்கான சிறந்த தோற்றத்திற்கான எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காணலாம்.

Update: 2023-11-27 18:30 GMT
Click the Play button to listen to article

பெண்களை பொறுத்தவரை சாதாரண வீட்டு விசேஷமாக இருந்தாலும் சரி, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, உடை மற்றும் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். ஆண்களைக் காட்டிலும் பெண்களின் உடை மற்றும் அணிகலன்கள் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். பாரம்பரியமான முறைக்கு அது சரியாக இருக்கும். ஆனால் அதே சமயத்தில் பார்ட்டிக்கான லுக் என்பது சிலருக்கு கொஞ்சம் சிக்கலாகத்தான் இருந்து வருகிறது. எனவே பார்ட்டிக்கான சிறந்த தோற்றத்திற்கான எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காணலாம்.

பார்ட்டி லுக்குக்கான சில டிப்ஸ்

• முதல் கட்டமாக பிரைமர் பயன்பாடு, ஆனால் அதற்கு முன்னதாக முகத்தை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். குளித்த பிறகும் முகத்தை கழுவ வேண்டுமா? என்றால் அது தேவையில்லை, ஆனால் குளித்த பின்பு அரைமணிநேர இடைவெளிவிட்டால், முகத்தை கழுவிய பின்பு மேக்கப் செய்யத் தொடங்குவது நல்லது. அதன் பிறகே பிரைமரை முகத்தில் பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.

• பிரைமர் பயன்படுத்திய பின் மாய்ச்சுரைசரை, பிரஷ் பயன்படுத்தி முகத்தில் சரிவர அப்ளை செய்ய வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் பொழுது 15 நொடி இடைவெளியானது அவசியமாகும்.


கலர் கரெக்ட்டர் மற்றும் ஃபவுன்டேஷன்

• அதன்பிறகு கலர் கரெக்ட்டர், இதனை முகத்தில் கருமையான புள்ளிகள் இருக்கும் இடத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

• அடுத்ததாக ஃபவுன்டேஷனை பயன்படுத்த தொடங்கலாம். ஒவ்வொருவரின் தோல் நிறத்திற்கு ஏற்றாற்போல டெஸ்ட் செய்தபின் பயன்படுத்துவது கட்டாயம். ஃபவுன்டேஷனை முகம் முழுவதும், அதாவது காதுப்பகுதியோடு சேர்த்து பிரஷ் பயன்படுத்தி அப்ளை செய்ய வேண்டும்.

• பின்பு ‘ஹைலைட்டிங் கன்சீலர்’ பயன்படுத்த வேண்டும். முகத்தில் முக்கியமான முன்னிலைப்படுத்தும் படியான இடங்களில் மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும். முகத்தில் ‘T Zone’ என்று சொல்லக்கூடிய இடங்கள்தான் முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய இடங்கள்.

• இவை அனைத்தும் முடிந்த பின்னர் முகத்தில் பூசிய க்ரீம்கள் சரிவர முகத்தில் சேர்வதற்காக ஃபிக்சிங் பவுடரை பெரிய ப்ரஷ் கொண்டு முகம் மட்டுமல்லாமல் காது மற்றும் கழுத்து பகுதிகளோடு சேர்த்து நன்கு பயன்படுத்த வேண்டும். அடுத்ததாக சின்ன ப்ரஷை பயன்படுத்தி முகத்திலுள்ள நுணுக்கமான பகுதிகள், அதாவது கண்ணிற்கு கீழுள்ள இடங்களிலெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.


ஐ லைனர் மற்றும் லிப் லைனர்

• அடுத்ததாக கண்களின் புருவப் பகுதி. புருவப் பகுதியினை முதலில் ஸ்பூலியைப் பயன்படுத்தி ஷேப் செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

• இரவு நேரங்களில் பார்ட்டிக்கு செல்பவர்களின் கண்கள் லைட்டாக மின்னுவது போன்ற தோற்றத்தில் இருக்கவேண்டும். அதற்காக கண்களில் அதிகளவிலான கிளிட்டர்களைப் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

• கண்களில், அவரவர் தோலின் நிறங்களுக்கு ஏற்ப ஒரு ஃபேஸ் ஷேடை கண்ணுக்கு மேலுள்ள பகுதியில் அப்ளை செய்ய வேண்டும். பிறகு மின்னுவது போன்ற தோற்றத்திற்காக கண்களுக்கு மேல் உள்ள பகுதியில் ஷிம்மரைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் ஷிம்மர் பயன்படுத்துவதோடு விட்டுவிடாமல் அதோடு பேஸாக பயன்படுத்திய ப்ராடெக்டை மீண்டும் அதன்மீது பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லையேல் காஜலைக் கூட மேற்பகுதியில் பயன்படுத்தலாம். அது அவரவர் சொந்த விருப்பம்.

• அடுத்தப்படியாக கண்களுக்கு லைனர் போட்ட கொஞ்ச நேரத்திலேயே, முகத்தில் ப்ளஷ் போட்டுக்கொள்ளலாம். ஆனால் ப்ளஷ் பயன்படுத்த வேண்டும் என்பதில் கட்டாயம் ஏதும் இல்லை.


கான்டோர் மற்றும் ஹைலைட்டர்

• அதன் பின்னர் கான்டோர். கான்டோர் வாங்கி பயன்படுத்த இயலாதவர்கள் காம்பாக்ட்டை தோல் நிறத்திற்கு ஏற்றாற்போல வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

• அடுத்ததாக கண்களுக்கு காஜல் போட்டு, பிறகு பேஸ் பயன்படுத்த வேண்டும். வெறும் காஜல் மட்டுமே பயன்படுத்திக்கொண்டு விட்டுவிடுவது நல்லதல்ல. காஜலுக்கு பிறகு மஸ்காராவை பயன்படுத்த வேண்டும்.

• பார்ட்டி லுக்கைப் பொறுத்தவரையில் கண்கள் போல்டாக இருந்தால், உதடானது சிறியதாக தோற்றமளிக்கும்படி இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டும் ஒரே அளவில் இருக்கக்கூடாது. அதற்காக உதட்டில் லைனர் பயன்படுத்தி ஷேப் செய்ய வேண்டியது அவசியமாகும்.

• இறுதியாக ஹைலைட்டரை முகத்தில் ஆங்காங்கே பிரஷ் கொண்டு பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும்பொழுது முகப்பரு இருக்கும் இடங்களில் ஹைலைட்டர் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்வது நல்லது. பிறகு முடிவில் நெற்றியில் பிந்தியோடு, செட்டிங் ஸ்ப்ரே வைத்து சீல் செய்துகொள்ள வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்