இனி வீட்டிலேயே சுலபமாக ஃபேஷியல் செய்யலாம் - பியூட்டீஷியன் மைதிலி டிப்ஸ்!

குளித்த பிறகு கொஞ்சம் மாய்ஸரைசர் தடவினால் சருமம் ஜொலிஜொலிக்கும். பொதுவாக பேஷியல் மசாஜ் செய்வதால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்கு வெளியேறி சருமம் பொலிவுறும்.

Update: 2023-08-28 18:30 GMT
Click the Play button to listen to article

ளைக் காட்டிலும் பெண்களே விதவிதமான ஹேர் ஸ்டைல் போடுவதிலும் பேஷியல் பண்ணுவதிலும் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் ஹேர் ஸ்டைலில் ஒன்றான கர்லிங் மற்றும் பேஷியல் செய்வது எப்படி? முடியை கவனமாக, முறையாக கையாள்வது எப்படி? என்பது குறித்து விளக்குகிறார் பிரபல பியூட்டீஷியன் மைதிலி.

கர்லிங்:

  • தலைமுடி முழுவதும் சுருள் சுருளாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் முடியை பல சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து கர்ல் செய்யலாம். ஆனால் கொஞ்சம் மட்டும் கர்ல்ஸ் வேண்டும் என்பவர்கள் முடியை சில பகுதிகளாக பிரித்துக்கொள்ளலாம்.
  • தலைமுடியை கர்லிங் செய்வதற்கு முன் அதற்குரிய சீரத்தை தடவவேண்டும்.

கர்ல்ஸ் ஹேர்ஸ்டைல்

  • முடியை நீளமாக இழுத்து கர்லிங் ராட் (curling rod) கொண்டு முடியின் கீழ்ப்பகுதியிலிருந்து சுருட்டிக்கொண்டே மேல்பகுதிவரை செல்லவேண்டும்.
  • ஒரு நிமிடத்திற்கு முடியை சுருட்டிய நிலையில் வைத்து பின்னர் அந்த கர்லிங் ராடிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக லூஸ் விடவேண்டும்.
  • இப்படி பகுதி பகுதிகளாக பிரிக்கப்பட்ட மொத்த முடிக்கும் இதேபோல் செய்தால் கர்ல்ஸ் ஹேர் ஸ்டைல் ரெடி.
  • இதனையே ஹேர் ஸ்டைலாகவும் வைத்துக்கொள்ளலாம் அல்லது மேல் பகுதியில் வேறு ஹேர் ஸ்டைல் செய்துகொண்டு கீழே மட்டும் கர்ல்ஸ் செய்துகொள்ளலாம்.
  • கர்ல்ஸ் செய்துவிட்டு அதை வைத்து வேறு ஹேர் ஸ்டைலையும் செய்துகொள்ளலாம்.

ஆரோக்கியமான டயட்

சருமம் பளபளப்பாகவும், பொலிவாகவும் இருக்க என்ன செய்யவேண்டும்?

முதலில் ஆரோக்கியமான உணவை உட்கொண்டு ஹீமோகுளோபினை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். இது தவிர சருமத்திற்கு ஏற்ற மாய்ஸரைசர் பயன்படுத்தலாம். வாரத்திற்கு ஒருமுறை வீட்டிலிருக்கும் தேங்காய் எண்ணெய்/ நல்லெண்ணெய்/ விளக்கெண்ணெய் என ஏதேனும் ஒரு எண்ணெயைக் கொண்டு உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கவேண்டும்.

குளித்த பிறகு கொஞ்சம் மாய்ஸரைசர் தடவினால் சருமம் ஜொலிஜொலிக்கும். பொதுவாக பேஷியல் மசாஜ் செய்வதால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்கு வெளியேறி சருமம் பொலிவுறும். ஆனால் நம் முகத்திற்கு எந்தவிதமான பேஷியல் பொருத்தமானதாக இருக்கும் என்று நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று செய்வது நல்லது.


ஃபேஸ் பேக்

வீட்டிலேயே ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி?

அரிசி மாவில் எலுமிச்சை பழத்தோல் அல்லது ஆரஞ்சு தோலை அரைத்து சேர்க்கவும். அதனுடன் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸ் செய்தால் கெட்டியான ஃபேஸ் பேக் கிடைக்கும். அந்த பேக்கை கழுத்திலிருந்து மேல்புறமாக தடவ ஆரம்பித்து முகம் முழுவதும் தடவ வேண்டும். இதனை கண்களின் மேலும் தடவிக்கொள்ளலாம். கீழ்ப்பக்கமாக தடவினால் தோல் தளர்ந்து போகும். இதுவே வீட்டில் செய்யக்கூடிய எளிமையான சூப்பரான ஃபேஸ் பேக்.

ஃபேஷியல்:

  • முதலில் டிஸ்யூவால் முகத்தை நன்றாக துடைத்துக்கொள்ள வேண்டும்.
  • அடுத்து கிளென்சர் கிரீமை உதட்டை சுற்றிலும், கண்களுக்கு கீழும் மேலும் தடவி சிறிதுநேரம் மசாஜ் செய்துவிட்டு, பிறகு முகம் முழுவதும் தடவவேண்டும்.
  • பின்னர் ஈரத்துணி அல்லது ஈர ஸ்பான்ஜ் கொண்டு துடைக்கவேண்டும். இப்படிச் செய்வதால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பளிச்சிடும்.

வீட்டிலேயே செய்யும் ஃபேஷியல் 

  • அடுத்து, ஃப்ரூட் எக்ஸ்ட்ராக்ட்டினை வாயின் மேல்ப்பகுதி, கீழ்ப்பகுதி, கருவளையங்கள், கரும்புள்ளிகள், வெண் புள்ளிகள் இருக்கும் இடங்கள் என்று மசாஜ் செய்வதுபோல் முகம் முழுவதும் தடவ வேண்டும். 15 முதல் 20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும்.
  • பிறகு முகத்தை ஸ்க்ரப் செய்ய வேண்டும். இப்படி ஸ்க்ரப் செய்வதால் முகத்துவாரங்களில் படிந்திருக்கும் அழுக்கானது வெளிவரும். பின்னர் ஈரத்துணியால் முகத்தை துடைக்க வேண்டும். ஸ்க்ரபின் அடுத்த ஸ்டெப், ஸ்டீம்மிங்.
  • ஸ்டீம் முடிந்த பின்னர் பிளாக் ஹெட்ஸ் ஒயிட் ஹெட்ஸ் அகற்ற வேண்டும். இதை ஸ்க்ரப் செய்யும்போதும் அகற்றலாம் அல்லது ஸ்டீம் செய்தபிறகும் அகற்றலாம். ஃபேஷியலின் இறுதியாக பழங்களினால் செய்யப்பட்ட ஃபேஸ்பேக்கை தடவி 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் ஈரத்துணியால் துடைத்தால் சிம்பிள் & ஈஸியான ஃபேஷியல் ஓவர்.

இப்படிச் செய்தால் முகம் நிச்சயம் பளபளக்கும். இந்த ஃபேஷியலை அனைவரும் வீட்டிலேயே செய்யலாம், அவ்வளவு எளிமையானது!

Tags:    

மேலும் செய்திகள்