அது என்ன ஹைட்ரா ஃபேஷியல்? - செய்துகாட்டுகிறார் பியூட்டீஷியன் பிரியா

சர்குலர் வடிவிலும், கீழிருந்து மேலாகவும் செய்தாலே போதும். ஐஸ்கட்டி மசாஜ் செய்தது போன்று இந்த மசாஜ் ஜில்லென இருக்கும். அடுத்து infrared மசாஜ். அதனைத் தொடர்ந்து ரேசர் மசாஜ் செய்யவேண்டும்.

Update: 2024-02-12 18:30 GMT
Click the Play button to listen to article

சரும நிறத்தை எப்படியாவது அதிகரிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் நிறத்தை அதிகரிப்பதைவிட இருக்கும் சருமத்தை நன்றாக பராமரித்து பளபளப்பாக வைத்திருப்பது அவசியம். இதற்கு பார்லர்களில் நிறைய ஃபேஷியல்கள் வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் ஹைட்ரா ஃபேஷியல். இதனை எப்படி செய்வது? இதிலுள்ள நன்மைகள் என்னென்ன? என்பதை படிப்படியாக விளக்குகிறார் பியூட்டீஷியன் பிரியா.

ஹைட்ரா ஃபேஷியலில் முதல் ஸ்டெப் ஸ்க்ரப்பர். இதற்கு முதலில் க்ளென்சிங் ஜெல்லை முகம் மற்றும் கழுத்து முழுவதும் பிரஷ்ஷால் தடவ வேண்டும். பின்னர் ஹைட்ரா ஃபேஷியல் மெஷினில் 10 நிமிடம் செட் செய்து கீழிருந்து மேலாக ஸ்க்ரப் செய்யவேண்டும். இப்படி செய்யும்போது லேசான சூட்டை சருமத்தில் உணரமுடியும். இப்படி செய்வதால் சருமத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கும்.

க்ளென்ஸ் செய்து முடித்தபிறகு முகத்தில் ஸ்ப்ரே செய்யவேண்டும். அதன்பிறகு வாக்கியூம் செய்து ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸை நீக்கவேண்டும். இதனால் இறந்த செல்கள் அகற்றப்படுவதுடன், சருமத் துளைகளும் திறக்கும்.


ஜெல் தடவுதல் - ஸ்க்ரப் செய்தல் - ஸ்ப்ரே செய்தல் - வாக்கியூம் மூலம் இறந்த செல்களை அகற்றுதல்

பிறகு க்ளென்சிங் க்ரீமை முகத்தில் தடவி, அல்ட்ராசோனிக் மெஷினால் மசாஜ் செய்யவேண்டும். இப்படி செய்யும்போது முகத்தில் தடவியிருக்கும் க்ரீமானது சருமத்தில் கலந்துவிடும். 10 நிமிடங்கள் அல்ட்ராசோனிக் மசாஜ் செய்துவிட்டு, அடுத்து கோல்டு(cold) மசாஜ். இதனை சர்குலர் வடிவிலும், கீழிருந்து மேலாகவும் செய்தாலே போதும். ஐஸ்கட்டி மசாஜ் செய்தது போன்று இந்த மசாஜ் ஜில்லென இருக்கும். அடுத்து infrared மசாஜ். அதனைத் தொடர்ந்து ரேசர் மசாஜ் செய்யவேண்டும். இதனால் சருமத்தில் தடவியிருக்கும் க்ரீம் முழுவதுமே சருமத்திற்குள் இறங்கிவிடும். ஒவ்வொரு மசாஜையும் 10 நிமிடங்கள் செய்யவேண்டும்.

அடுத்து பேக் தடவவேண்டும். அதனை மசாஜ் கிரீம் மீதோ அல்லது தனியாக ஒரு க்ரீம் தடவிய பின்னரோ போடலாம்.


க்ளென்சிங் க்ரீம் தடவுதல் - அல்ட்ராசோனிக் மசாஜ் - பேக் தடவியபின் ரேசர் கொடுத்தல் - லேசர் மாஸ்க் 

ஹைட்ரேட்டிங் மசாஜ் க்ரீமில் க்ளென்சிங் மற்றும் சருமத்தை ஹைட்ரேட் செய்யும் சீரம் இரண்டும் அடக்கம். இரண்டையும் ஒன்றன்மேல் ஒன்றாக பூசவேண்டும். அதன்பிறகு பேக் போடவேண்டும். பேக்கின்மீது ஒரு மாஸ்க் போட்டு, அதன்மேல் லேசர் மாஸ்க்கை வைத்து 10 நிமிடங்கள் அப்படியே விடவேண்டும். இதனால் தடவியிருக்கும் க்ரீம்கள் மற்றும் மாஸ்க் அனைத்துமே வறண்டுவிடும். பின்னர் அதனை நன்றாக துடைத்து எடுக்கவேண்டும்.

ஃபேஷியல் செய்தால் சரும நிறம் அதிகரிக்குமா என்ற சந்தேகம் நிறையப்பேருக்கு இருக்கும். ஆனால் இது சருமத்தை பளிச்சென மாற்றும். நிறத்தை அதிகரிக்காது. ஃபேஷியல் செய்துவிட்டு நன்றாக தூங்கி எழுந்தால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பளபளப்பாகும்.

Tags:    

மேலும் செய்திகள்