இளமையான தோற்றத்துக்கு ஈஸியான பேஸ் பேக்! - செய்வது எப்படி?
இளமையாகத் தெரிய சிறந்த Anti-aging ஃபேஸ் பேக் செய்வது எப்படி என்ற செய்முறையை விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.
By : ராணி
Update:2023-09-26 00:00 IST
பெண்களில் பலர் தங்களுக்கு வயதானாலும் முகம் இளமையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். 0 - 25 வயது உள்ளவர்களை Onward Aging என்றும், 25 வயதுக்கு மேற்பட்டவர்களை Downward Aging என்றும் வகைப்படுத்தியுள்ளனர். அப்படி 0 - 25 இளம் வயதினரும் நாற்பதுகளை எட்டும் பெண்களும்கூட இளமையாகத் தெரிய சிறந்த Anti-aging ஃபேஸ் பேக் செய்வது எப்படி என்ற செய்முறையை விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.
டிரை ஃப்ரூட்ஸ் ஃபேசியல்
- முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் 2 அல்லது 3 பேரீட்சை, 1 டீஸ்பூன் உலர்ந்த திராட்சை, 1 டீஸ்பூன் பொட்டுக்கடலை, 4 - 5 முந்திரி, 4 - 5 பாதாம் ஒன்றாக சேர்த்து அவை மூழ்கும் அளவுக்கு சுடு தண்ணீர் ஊற்றி சுமார் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த டிரை ஃப்ரூட்ஸை நன்கு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ள வேண்டும்.
ட்ரை ஃப்ருட்ஸ் ஃபேஷியலுக்கு தேவையான பொருட்கள்
- ஆன்டி ஏஜிங் பேக் (Anti-aging pack) போடுவதற்கு முதற்படியாக கற்றாழை ஜெல் பயன்படுத்தி முகத்தை மசாஜ் செய்யவேண்டும். குறிப்பாக கற்றாழை ஜெல்லை 2 முதல் 3 முறை நன்றாக கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும். கற்றாழை ஜெல்லினால் மசாஜ் செய்வதால் முகம் குளிர்ச்சியாக இருக்கும். மேலும் முகத்திற்கு இது ஒரு நல்ல கிளென்சர் மற்றும் மாய்ஸ்சரைசரும் கூட.
- இந்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி தினமும் கூட 2 முதல் 3 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம். எப்போதும் மேல் நோக்கித்தான் மசாஜ் செய்யவேண்டும். 2 முதல் 3 நிமிடங்களுக்கு மசாஜ் செய்த பின்னர் சுத்தமான ஈரத்துணி (Face Cloth) அல்லது காட்டனை ஈரம் செய்து முகத்தை நன்றாக துடைக்க வேண்டும்.
கற்றாழை ஜெல் மசாஜ்
- அடுத்ததாக ரோஸ் வாட்டரை முகத்தில் ஸ்பிரே செய்ய வேண்டும். ரோஸ் வாட்டர் முகத்திற்கு ஒரு சிறந்த டோனர் (Toner) அல்லது டானிக் (Tonic) என்று சொல்லலாம். இதைப் பயன்படுத்துவதால் சரும துவாரங்கள் இறுக்கமாகும்.
- இறுதிப்படியாக அரைத்து வைத்த டிரை ஃப்ரூட்ஸ் பேஸ்டை ப்ரஷ்ஷால் முகத்தில் தடவ வேண்டும். வாரத்தில் 1 அல்லது 2 முறை இந்த ஃபேசியல் செய்யலாம். பேஸ்ட்டை முகத்தில் தடவியபின் Eye Pad-ஐ கற்றாழை ஜெல்லில் டிப் செய்து கண்கள்மேல் வைக்கவேண்டும்.
- ஒரு கோட்டிங் முடிந்த நிலையில் சிறிது நேரம் கழித்து இரண்டாவது கோட்டிங் போடலாம். இந்த பேஸ்ட்டை அரைத்து ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். அரைத்து வெளியில் வைத்தால் சீக்கிரம் கெட்டுப்போகும். இந்த ஃபேஸ் பேக்கை அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம்.
ட்ரை ஃப்ரூட்ஸ் ஃபேஷியல்
- இரண்டாவது கோட்டிங் போட்டு முடித்து முகத்தை 10 நிமிடங்களுக்கு காயவைக்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து Eye Pad-ஐ எடுத்துவிட்டு கை விரல்களை தண்ணீரில் நனைத்து முழு முகத்தையும் 2 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவேண்டும்.
- எண்ணெய் சருமம் இருப்பவர்கள் இந்த ஃபேசியலை தவிர்ப்பது நல்லது. இறுதியாக ஈரத்துணியை உபயோகித்து முகத்தை சுத்தமாக துடைக்க வேண்டும். ஒருமுறை ஃபேசியல் செய்வதால் பயன் கிடைக்காது. தொடர்ந்து ஃபேசியல் செய்வதன் மூலமே ரிசல்ட் தெரியும்.
- இந்த டிரை ஃப்ரூட்ஸ் ஃபேசியல் செய்வதனால் முகத்திலிருக்கும் கரும்புள்ளிகள், வெண் புள்ளிகள் நீங்கும். சருமம் மென்மையாகவும் இளமையாகவும் இருக்கும்.