அனைத்திலும் வெற்றி

Update: 2024-12-09 18:30 GMT

2024 டிசம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். எதிர்கால திட்டங்களை எப்படி வெற்றியாக்குவது என்று யோசியுங்கள். நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. உங்களின் கடின முயற்சிகளுக்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும். எதிர்பாராத பயணம் அந்த பயணத்தால் நன்மை இருக்கிறது. நிறைய படிப்பீர்கள். உங்களின் வெற்றிகள் உறுதியாகும். நல்ல வேலை ஆட்கள் கிடைப்பார்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வேலையில் உங்கள் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்காலம் நன்றாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வயிறு, நரம்பு தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும். சொந்த தொழில், கூட்டுத்தொழில் இரண்டும் நன்றாக உள்ளது. திருமணத்திற்கு வாய்ப்புள்ளது. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது. அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மைகள் உண்டு. குறிப்பாக ஆண் நண்பர்களால் ஏற்றம், முன்னேற்றம் உண்டு. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் உங்கள் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். இந்த வாரம் முழுவதும், முருகனையும், சிவனையும் வழிபாடு செய்யுங்கள்; இன்னும் வெற்றி கூடும். 


Tags:    

மேலும் செய்திகள்