அடக்கி வாசியுங்கள்
2025 மார்ச் 11-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தொழிலில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். தங்கள் தொழிலை பெரிய அளவில் விரிவுப்படுத்த நினைப்பவர்களுக்கு அதற்கான வாரமாக உள்ளது. வெளிநாட்டு தொடர்புகள் நன்றாக உள்ளது. வெளியூர், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ், அந்தஸ்து இருக்கிறது. வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில், இதுவரை உங்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் இனிமேல் கிடைக்கும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கடன் கிடைக்கும். கல்வி நன்றாக உள்ளது. அம்மாவுடைய அன்பு, ஆதரவு அமையும். முயற்சி எடுத்தால் உங்கள் தொழிலில் பெரிய அளவில் வர வாய்ப்புள்ளது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அடக்கி வாசியுங்கள். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் எதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள். இந்த வாரம் முழுவதும், சனி பகவான் மற்றும் சிவன் வழிபாடு செய்யுங்கள்.