நினைப்பது நடக்கும்
2025 ஜனவரி 21-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
மகிழ்ச்சி, சந்தோஷம், எண்டெர்டெயின்மெண்ட், எதிர்பாராத டூர், டிராவல் ஆகியவை இருக்கிறது. உங்கள் வேலையை மகிழ்ச்சியோடும், சந்தோஷகரமாகவும் பார்க்க வாய்ப்புள்ளது. வேலை நிமித்தமான முன்னேற்றங்கள் உண்டு. பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ், போனஸ் என எதை எதிர்பார்த்திருந்தாலும் அது பணமாகவோ, பொருளாகவோ வர வாய்ப்புகள் உண்டு. சுப காரியங்கள், சுபநிகழ்ச்சிகளுக்காக செலவு செய்வீர்கள். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. தெய்வ அனுகூலம் இருப்பதால் நீங்கள் எடுக்கும் காரியங்கள் நல்லவிதமாக முடியும். எண்ணங்கள் செயலாக்கம் பெறும். நினைப்பது அனைத்தும் நடக்கும். அதற்கான வாய்ப்புகளும் உண்டு. கல்வி நன்றாக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த நல்ல சேல்ஸ், லாபம் இருக்கிறது. விவசாயம் செய்பவர்களுக்கு அதிலும் லாபம் இருக்கிறது. வழக்குகளில் ஜெயிக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.