அடக்கி வாசியுங்கள்
2025 ஏப்ரல் 01-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் தொழிலில் கவனம் செலுத்துங்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணத்திற்கான வாய்ப்பு, அது சம்மந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும். வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் அங்கு ஏதேனும் முதலீடு செய்ய நினைத்தால் செய்யுங்கள். உயர்கல்வி நன்றாக உள்ளது. அதேநேரம் அதில் தடை ஏற்படவும் வாய்ப்புள்ளது. தேவையில்லாத பயணங்களை தவிருங்கள். யாரை நம்புவது? நம்பக்கூடாது? என்ற எண்ணங்கள், சிந்தனைகள் ஏற்படும். வீடு, இடம் மாறலாமா போன்ற எண்ணங்கள் உண்டாகும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சுமாராக இருக்கிறது. கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். உங்கள் கையில் பணம், தனம், பொருள் இருக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிக்க வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம். காதல் விஷயங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். முறிந்த காதல் மீண்டும் சேரும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், நவகிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவானையும், பைரவரையும் வழிபாடு செய்யுங்கள்.