முறிந்த காதல் சேரும்
2025 பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
ஒருபுறம் தொழில், வேலை வாய்ப்புகள் நன்றாக இருந்தாலும் கூட, இன்னொருபுறம் எல்லாவற்றிலும் பிரச்சினையாக இருக்கிறது. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் திருப்தியற்ற மனநிலையில் இருப்பார். நினைப்பது அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களுடைய திட்டங்கள் பெரிய அளவில் வெற்றி பெறும். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். உங்களின் சொத்துக்கள் எதிர்பார்த்த விலைக்கு போகும். காதல் விஷயங்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். முறிந்த காதல் மீண்டும் சேர வாய்ப்புள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். தொழில் முனைவோராக வர நினைப்பவர்கள் தங்கள் தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெண் நண்பர்கள் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் நட்பை மேம்படுத்துங்கள். இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் உங்களின் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.