திட்டம் வெற்றி பெறும்
2025 பிப்ரவரி 04-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
காதல் விஷயங்கள் வெற்றிபெற வாய்ப்புள்ளது. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, நன்மைகள் உண்டு. உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். நினைப்பது அனைத்தும் நடக்கும். வாழ்க்கையில் யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் ஏதோவொரு வகையில் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். விற்பனையாகாத சொத்துக்கள் விற்பனையாகும். வீடு, இடம் மாற்றங்கள் உண்டு. உறவுகளால் பிரச்சினை, நெருங்கிய உறவுகள் உங்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான சூழ்நிலைகள் ஆகியவை உண்டு. உங்களின் திட்டங்கள் பெரிய அளவில் வெற்றி பெறும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத ஆலய, தெய்வ தரிசனம் அமையும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம்; குழந்தைகளால் நன்மைகள் உண்டு. வேலையை பொறுத்தவரை வேறு அலுவலகம், வேறு வேலை மாற்றம் செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். அதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள்.