ஏற்றமான காலம்

Update:2024-10-29 00:00 IST

2024 அக்டோபர் 29-ஆம் தேதி முதல் நவம்பர் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் நினைப்பது நடக்கும்; அதற்கான சூழ்நிலைகள் உருவாகும். வாழ்க்கையில், நீங்கள் யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாகவும், உண்மையானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள். பகுதி நேரமாகவோ, ஆன்லைனிலோ, கரசிலோ படிப்பதற்கான வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கிறது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற்றால், நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல், மீடியா, மார்க்கெட்டிங் ஆகிய துறைகளில் இருப்பவர்கள் நல்லதொரு வருமானத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலையும் நன்றாக உள்ளது. நீங்கள் செய்யக்கூடிய தொழிலும் ஏற்றத்தை கொடுக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். வேலையாட்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். இந்த வாரம் முழுவதும், முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்