போக்குவரத்தில் எச்சரிக்கை

Update:2025-01-07 00:00 IST

2025 ஜனவரி 07-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கல்வி சுமாராக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது; லாபம் இல்லை. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். இளைய சகோதர - சகோதரிகளால் நன்மைகள் உண்டு. விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். உறவுகளால் தேவையற்ற மன வருத்தங்கள், நன்மைகள் என இரண்டுமே இருக்கிறது. போக்குவரத்து, வண்டி, வாகனங்கள் போன்றவற்றில் பயணம் செய்யும் பொழுது எச்சரிக்கையாக சென்று வாருங்கள். தொழில் சுமாராக இருப்பதால் லாபம் பெரிதாக இல்லை. ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கும் சுமாராக இருக்கிறது. புதிய நட்பு, ஆண் நண்பர்களால் நற்பலன்கள், அந்நிய மொழி பேசும் நண்பர்களால் சகாயம் ஆகியவை உண்டு. இந்த வாரம் முழுவதும், உங்களின் இஷ்ட தெய்வம் மற்றும் பெருமாளை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்