2023, செப்டம்பர் 5 முதல் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த மாதம் முழுவதும் சூரியன் 12-ஆம் வீட்டில் இருப்பதால் நினைத்த காரியங்கள் தாமதமாகும். உடன் பணிபுரிவோர் ஆதரவு கிடைக்காது. வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்காது. வேலையில் அழுத்தமும் பதற்றமும் இருந்து கொண்டே இருக்கும். மகாவிஷ்ணு, மகாலட்சுமி மற்றும் சனி பகவானுக்கு விளக்கேற்றுவதன் மூலம் பதற்றம் குறையும். நிதி நெருக்கடி இருக்கும். தேவையான நேரத்தில் பணம் கிடைக்காது. நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறாது. நிறைய தடைகள் ஏற்படும்.