உறவுகளால் மகிழ்ச்சி

Update:2024-11-26 00:00 IST

2024 நவம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பெரிய அளவில் செய்யக்கூடிய முயற்சிகள் நன்மையாக இருக்கும். நீங்கள் யாரையாவது நம்பி இருந்தால் அவர்கள் உங்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பார்கள். தொடர்புகொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்புகொள்ளுங்கள். நீண்ட நாட்களாக நீங்கள் யோசித்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் கண்டிப்பாக இந்த வாரத்தில் நடக்கும். நீங்கள் எதிர்பார்க்கும், எதிர்பாராத செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். நீங்கள் வாழ்க்கையில் செய்ய நினைப்பவற்றை வரிசைப்படுத்தி செய்யுங்கள். வாழ்க்கையில் எதிர்கால திட்டம், குறிக்கோளை நோக்கி உங்கள் பயணம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மிகப்பெரிய நன்மைகள் உங்களுக்கு இருக்கிறது. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். பகுதி நேரமாகவோ, ஆன்லைனிலோ மேற்கொண்டு படிப்பதற்கு இந்த வாரம் வாய்ப்புள்ளது. விற்பனையாகாமல் இருந்த சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். தேடுதல் என்பது பெரிய அளவில் இருக்கும். உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், இளைய சகோதர - சகோதரிகளால் நன்மை ஆகியவை இருக்கிறது. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. நினைப்பது அனைத்தும் நடக்கும். வேலை வாய்ப்புகள் பிரமாதமாக உள்ளது. தொழில் நன்றாக உள்ளது. மணவாழ்க்கையும் பரவாயில்லை. இந்த வாரம் முழுவதும், சிவாலயங்களில் சிவன் வழிபாடு முக்கியம்.

Tags:    

மேலும் செய்திகள்