எதிர்பாராத பயணம்
2024 ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தேவையில்லாத செலவினங்களை சந்திக்க வேண்டிய வாய்ப்புகள் உள்ளதால் உங்கள் பணமோ அல்லது வேறு யாருடைய பணமாவது உங்கள் கையில் இருக்கும் பட்சத்தில் அதனை ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஒருபக்கம் சின்ன சின்ன தடைகள் இருந்தாலும், இன்னொரு பக்கம் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை அவசியம். அவற்றை குருபகவானும், சனிபகவானும் உங்களுக்கு கொடுப்பார்கள். இந்த வாரத்தில் எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பாராத செய்திகள் நன்மையை கொடுக்கும். நிலையாக இருப்பது மாதிரியான சொத்துக்கள், இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு, அது சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும். கல்வி சிறப்பாக உள்ளது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் பண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். எல்லாம் லாபம் வருவது போன்ற ஒரு தோற்றம். ஆனால், சுமாராகத்தன் இருக்கிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல புகழ், அந்தஸ்து, பாப்புலாரிட்டி மற்றும் வருமானங்கள் இருக்கிறது. சொந்த தொழில் சுமாராக இருக்கும். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சி செய்யலாம். இந்த வாரம் முழுவதும் சிவனையும், பெருமாளையும் வழிபாடு செய்யுங்கள்.