உறவுகளால் பிரச்சினை
2024 ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கிரக ரீதியாக உங்களின் விருப்பம், எண்ணம், ஆசை, அபிலாஷை ஆகியவை பூர்த்தியாகும். நீங்கள் செய்யும் தொழில் ஓரளவு லாபகரமாக இருக்கும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சித்தால் அது வெற்றியடையும். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. ஆனால், மன அழுத்தம் என்பது இருக்கும். வேறு அலுவலகம் மாற வேண்டும், அதற்காக பேப்பர் போட வேண்டும் என்று நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். பின்னாளில் நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருந்தாலும் அதே அளவுக்கு செலவினங்களும் இருக்கின்றன. எது எப்படி இருந்தாலும் பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியடைய வாய்ப்புகள் இல்லை. விற்காத சொத்துக்கள் விற்பனையாகும். எல்லாவிதமான உறவுகளையும் அனுசரித்து செல்லுங்கள். ஏனென்றால் அவர்களால் உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள், போராட்டங்கள் உள்ளன. கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு சுமாராகத்தான் இருக்கிறது. உங்களின் வேலையாட்கள் உங்களை விட்டு பிரிந்து போவார்கள். அவர்களால் உங்களுக்கு பிரச்சினை இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் ஆஞ்சநேயரை தரிசனம் செய்யுங்கள்.