பணவரவு

Update: 2024-07-01 18:30 GMT

2024 ஜூலை 02-ஆம் தேதி முதல் ஜூலை 08-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுக்கு வெற்றிகள் பெரிய அளவில் இருக்கிறது. வராத பணங்கள் வந்து சேரும். குறிப்பாக கணவன் அல்லது மனைவி மூலமாக பொருள் வரவு இருக்கிறது. இரண்டு பேருக்குமே அதற்கான வாய்ப்புகள் இல்லாத பட்சத்தில் முன்னோர்களின் சொத்துக்கள் வருவதற்கான சூழல்கள் இந்த வாரத்தில் உள்ளன. அதற்கு வாய்ப்புகள் இல்லை என்பவர்களுக்கு பென்ஷன், பி.எஃப், கிராஜுவிட்டி, இன்சூரன்ஸ் ஆகிய பணங்கள் வரும். வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. எந்த பணியில் இருந்தாலும் அந்தஸ்து கூடும். வேலையில் மாற்றங்கள் உண்டு. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு லாபம் இருக்கிறது. விவசாயமும் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. அரசியல் வாழ்க்கை மிகப்பெரிய ஏற்றம், முன்னேற்றத்தை கொடுக்கும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள், கேடயங்கள் மட்டுமின்றி அரசின் அங்கீகாரம் கிடைக்கும். நல்லதொரு ஸ்பான்சர்ஷிப் கிடைப்பார்கள். உங்களின் நட்பு வட்டாரம் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மூத்த சகோதர - சகோதரிகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். அதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும் ஆஞ்சநேயர் மற்றும் தன்வந்திரி பகவானை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்