தொழில் சிறப்பு

Update:2024-06-18 00:00 IST

2024 ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொந்த தொழில், கூட்டுத்தொழில் இரண்டுமே நன்றாக உள்ளது. அதில் லாபமும் அடைவீர்கள். வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணங்கள் வந்து சேரும். உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். சிறு தொழில், சுயதொழில், ஆன்லைன் பிசினஸ் ஆகியவை நன்றாக உள்ளன. உங்களின் முயற்சிகள் வெற்றி பெறுவதுபோல் இருந்தாலும், இறுதியான வெற்றிகள் உங்களுக்குத்தான். விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். இளைய சகோதர - சகோதரிகளால் தேவையற்ற பிரச்சினைகள், மனவருத்தங்கள் உண்டு. நெருங்கிய உறவுகளை பிரிந்து இருப்பதற்கான காலம். கல்வியை பொறுத்தவரை நன்றாக உள்ளது. புதிதாக சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. யாரெல்லாம் பணியில் மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்களோ அதற்கான முயற்சியை செய்யுங்கள். சொந்த தொழில், கூட்டுத்தொழில் இரண்டுமே உங்களுக்கு நன்றாக உள்ளது. மணவாழ்க்கையை பொறுத்தவரை மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. இந்த வாரம் முழுவதும் நவகிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவான் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய தன்வந்திரி பகவானை தரிசனம் செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்