மன குழப்பங்கள் இருக்கும்
By : ராணி
Update:2023-12-12 00:00 IST
2023, டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீண்ட நாட்களாக சொத்து, இடம் வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு அமையும். வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் உண்டு. மனைவி, குழந்தைகளுக்காக செலவு செய்யும் சூழல் ஏற்படும். முயற்சி வெற்றியடைவது போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் அதில் போராட்டங்கள், மன குழப்பங்கள் இருக்கும். ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்துவைக்க வேண்டும். வாழ்க்கைக்கான திட்டமிடல் அவசியம். நிதானமும், கவனமும் தேவை. யாரையும் நம்ப வேண்டாம். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சனி பகவான், குரு பகவான் தரிசனம் செய்ய நற்பலன்கள் ஏற்படும்