கன்னி - காதலில் தோல்வி
2024 ஜனவரி 23 முதல் ஜனவரி 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உயர்கல்வி சிறப்பாக உள்ளது. வீடு, நிலம் வாங்குவீர்கள். உற்பத்தி மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் சிறப்பாக உள்ளன. காதல் தோல்வி ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ஆன்லைன் தொழில் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். வருமானம் சிறப்பாக உள்ளது. உடன் பணியாற்றுபவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். தொழில் சுமாராக இருக்கும். கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குழந்தைகளால் செலவு ஏற்படும் அல்லது அவர்களை பிரிந்து இருப்பீர்கள். தேவையில்லாத குழப்பம் வேண்டாம். சிவ தலத்தில் இருக்கக்கூடிய பிரம்மா மற்றும் மகாலட்சுமியை வழிபடுவது சிறந்தது.