வேலைக்கு மதிப்புக் கிடைக்காது
வேலை மற்றும் பண வரவில் பிரச்சினைகள் இருக்கலாம். அம்மா மற்றும் மனைவியுடன் சிறுசிறு தவறான புரிதல்கள் ஏற்படலாம்.;
By : ராணி
Update:2023-09-12 00:00 IST
2023, செப்டம்பர் 12 முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். பேச்சு நன்றாக இருக்கும். பயணங்களில் காரியசித்தி வாய்க்கும். குழந்தைகள் மற்றும் வீட்டிலுள்ள பெரியவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். வேலை மற்றும் பண வரவில் பிரச்சினைகள் இருக்கலாம். அம்மா மற்றும் மனைவியுடன் சிறுசிறு தவறான புரிதல்கள் ஏற்படலாம். வேலைபார்க்கும் இடங்களில் வேலைக்கு மதிப்பு கிடைக்காத சூழல் அல்லது உடன் பணிபுரிபவர்களின் உதவி கிடைக்காமல் போகலாம். நினைப்பதை போல் நடக்காது. மகாவிஷ்ணு, மகாலட்சுமி மற்றும் சனி பகவானுக்கு விளக்கேற்றிக்கொண்டே வந்தால் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். 13, 14 மற்றும் 15ஆம் தேதியில் பாதி நாள் கடினமாக இருக்கும்.