பணவரவு நன்றாக இருக்கும்.
வேலையில் நிறைய அழுத்தம், பதட்டம் இருக்கும். ஆனால் பணி முடிந்து வீடு திரும்பியதும் இனிமையான சூழல் உருவாகும்.;
By : ராணி
Update:2023-08-01 09:45 IST
2023, ஆகஸ்ட் 1 முதல் 7- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் பணவரவு நன்றாக இருக்கும். வேலையில் நிறைய அழுத்தம், பதட்டம் இருக்கும். ஆனால் பணி முடிந்து வீடு திரும்பியதும் இனிமையான சூழல் உருவாகும். குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் தவறான புரிதல் இருக்கும். சுக்கிரன் 7 ஆம் தேதி மாறுவதால் குடும்பத்தினரிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். கோபத்தை குறைத்து பிரச்சினைகளை அமைதியாக கையாளவும். இந்த வாரம் 3, 4 மற்றும் 7 ஆம் தேதிகளில் பிரச்சனைகள் ஏற்படலாம். சந்திரன், சனி, குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபடவும்.