காதலில் போராட்டம்

Update:2024-07-16 00:00 IST

2024 ஜூலை 16-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கையில் பணம் இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இல்லையென்றால் தேவையில்லாத செலவுகள், விரயங்கள், வைத்தியச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஆரம்பத்தில் தடை இருந்தாலும், இறுதியில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்களின் சொத்துக்கள் விற்பனை ஆகாமல் இருந்தால் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கல்வி நன்றாக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை, வருமானங்கள், சம்பாத்தியங்கள் ஆகியவை இருக்கின்றன. அதிலும் விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு முன்னேற்றம் இருக்கிறது. காதல் விஷயங்களில் நிறைய போராட்டங்கள், பிரச்சினைகள் உண்டு. வேலையை பொறுத்தவரை வேலை இல்லை என்ற சூழ்நிலை இல்லை. வேலையில் மாற்றங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தேவை இருந்தால் மட்டும் கடன் வாங்குங்கள். சொந்த தொழில் பரவாயில்லாமல் இருக்கிறது. கூட்டுத்தொழில் பார்ட்னர் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அல்லது அவருக்காக நீங்கள் நிறைய உழைக்க வேண்டிய காலங்கள் இருக்கின்றன. வெளிநாட்டு தொடர்புகள் நன்றாக உள்ளது. அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வாரை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்