புதிய முயற்சிகள் வேண்டாம்

Update:2024-01-16 00:00 IST

2024 ஜனவரி 16 முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீண்ட நாட்களாக மனை, வீடு, வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க யோசித்தவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. விலை உயர்ந்த ஆடைகள் வாங்குவதற்கான சூழல் உண்டாகும். அதற்கான பணமும் வந்து சேரும். புதிய முயற்சிகள் ஏதும் செய்ய வேண்டாம். உறவுகள் முக்கியம். அவர்களுடன் இணக்கமான சூழலில் இருப்பது நல்லது. விவசாயம் சார்ந்த தொழில்கள் உங்களுக்கு மகசூலையும், லாபத்தையும் கொடுக்கும். அம்மாவினுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். இதுவரை உங்கள் குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏதும் நடைபெறாமல் இருந்தால் அது நடந்தேறும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் இருக்காது. நண்பர்கள் துணை இருப்பர். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் மற்றும் பெருமாள் தலத்தில் இருக்கும் தன்வந்திரி பகவானை வழிபடுவது நல்லது. 

Tags:    

மேலும் செய்திகள்