திருமணம் கைகூடும்

Update:2023-09-26 00:00 IST

2023, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்

அதீத புத்தி, அதீத திறன், கணிதத்துறையில் அறிவு, செஸ் போன்ற விளையாட்டுகளில் வெற்றி கிட்டும். உடல்நலத்தில் கவனமும், குழந்தைகள் உடல்நலனில் அக்கறையும் கொள்ளவேண்டும். 27, 28 தேதிகளில் தொழில், வியாபாரம், குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். 29, 30 தேதிகளில் திருமணம் சார்ந்த விஷயங்கள் கைகூடி வரும். நண்பர்களிடமிருந்து சற்று சாதகமான பலன் கிடைக்கும். 1, 2 தேதிகளில் முயற்சிகளில் கவனம் தேவை. வியாபாரம், தொழில் மற்றும் குடும்ப விஷயங்களில் நிதானமும், பொறுமையும் அவசியம். பிரயாணங்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. சிவப்பு நிறத்தை பயன்படுத்துவது வெற்றியை கொடுக்கும். 

Tags:    

மேலும் செய்திகள்