செலவில் கவனம் தேவை
By : ராணி
Update:2023-09-19 00:00 IST
2023, செப்டம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிஷ வித்யாபதி கருணா.
இந்த வாரம் பொருள் விரயம் ஏற்படும். அதனால் செய்யும் ஒவ்வொரு செலவிலும் கவனம் தேவை. தாயார், மனைவிமூலம் சிறு குழப்பங்கள் ஏற்படும். குழந்தைகளாலும், கடன் சுமைகளாலும் சிறு குழப்பங்கள் ஏற்படும். குழந்தைகள் விஷயத்தில் கவனம் இருந்தால் மன குழப்பம் குறையும். சகோதரர் வழியில் பிரச்சினைகள் ஏற்படும். சிறுசிறு முயற்சிகளில் கவனமாக செயல்படும்போது வெற்றியடைய முடியும். உங்களுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் நீங்களே பொறுப்பு.