நண்பர்களை பிரிவீர்கள்
2024 ஆகஸ்ட் 06-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை என்பது இருக்கும். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருக்கும் அதே அளவுக்கு செலவினங்களும் இருக்கிறது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அவை திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பவர்களுக்கு கொஞ்சம் சுமாராகதான் உள்ளது. எதிர்பாராத எண்டெர்டெயின்மென்ட், டூர் அல்லது டிராவல் ஆகியவற்றிற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. எந்த துறையில் பணியாற்றினாலும் செய்யும் வேலையை திருப்திகரமாக பாருங்கள். உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் உங்கள் உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். பெரிய அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆரம்பித்து தொழில் முனைவோராக வர நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளது. நெருங்கிய நட்பு வட்டத்தை பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. மூத்த சகோதர - சகோதரிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய காலம். அவர்களும் ஏதோவொரு விதத்தில் உங்களை பிரிந்து இருக்க வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் உள்ளது. தெய்வ அனுகூலம் உங்களுக்கு கிடைப்பதால் எதிர்பாராத தெய்வ தரிசனம் உங்களுக்கு ஏற்படும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள், கேடயங்கள் இருக்கிறது. தேவையில்லாத எந்தவொரு விஷயத்திலும் தலையிடாதீர்கள். எல்லாவிதமான யூக வணிகங்களும் உங்களுக்கு சாதகமாக இல்லை. இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் சக்கரத்தாழ்வாரையும் வழிபாடு செய்யுங்கள்.