தொழிலில் ஏற்றம், முன்னேற்றம்

Update:2024-11-12 00:00 IST

2024 நவம்பர் 12-ஆம் தேதி முதல் நவம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

என்டர்டெயின்மென்ட், எதிர்பாராத டூர் அல்லது டிராவல் இருக்கும். அதற்காக நிறைய செலவு செய்யாதீர்கள். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம், பொருள் இருக்கிறது. அதற்கு ஏற்ற செலவுகளும் இருக்கிறது. மணவாழ்க்கையை பொறுத்தவரை பரவாயில்லை. கணவன் - மனைவி உறவில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் இருக்கும். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் பெரிய அளவில் இருக்கும். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் போன்றவை செய்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் நிறைய இருக்கிறது. நீங்கள் நம்பி இருப்பவர்கள் உங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்த, எதிர்பாராத செய்திகள் நன்மையாக இருக்கும். கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து கூடும். சமூக செயல்பாடுகள் பெரிய அளவில் வெளிப்படும். தொழில் நிறுவனம் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சூழ்நிலைகள் பெரிய அளவில் உள்ளது. தொழில் பரவாயில்லை. எது எப்படி இருந்தாலும் உங்கள் அந்தஸ்து கூடும். குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. இருந்தாலும் எதிர்பாராத பிரச்சினைகள் உங்கள் வேலையில் இருக்கும். அதனால் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். இந்த வாரம் முழுவதும் பெண் தெய்வ வழிபாட்டை அதிகப்படுத்துங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்