உடல் ஆரோக்கியத்தில் கவனம்
2025 ஜனவரி 21-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். எதிர்பாராத தெய்வ தரிசனம் இருக்கிறது. பெரிய அளவில் தொழில், ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. நினைப்பது அத்தனையும் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம், லாபம் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. லாபம் இல்லை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிப்பாக அம்மாவுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பயணம் உண்டு. அந்த பயணம் ஏதோவொரு வகையில் நன்மையாக முடியும். வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வழக்குகள் இருந்தால் விடுபடுவீர்கள். இந்த வாரம் முழுவதும் சிவன் தரிசனம் மற்றும் முருகப்பெருமானுடைய வழிபாட்டை அதிகப்படுத்துங்கள்.