வழக்குகளில் ஜெயிப்பீர்கள்

Update:2025-01-07 00:00 IST

2025 ஜனவரி 07-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி ஏதோவொரு ரூபத்தில் காப்பாற்றப்படும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்வதில் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். கிரக நிலைகள் சாதகமாக இல்லாததால், எல்லாவிதமான யூக வணிகங்களும் லாபத்தை கொடுப்பது மாதிரியான தோற்றம். ஆனால், லாபம் குறைவு. வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளன. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். மாற்றங்கள் ஏற்படும். பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ் போன்றவற்றிற்கு வாய்ப்புகள் உள்ளது. தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். வழக்குகள் இருந்தால் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. இந்த வாரத்தை பொறுத்தவரையில் நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்