பணம், பொருள் முடங்க வாய்ப்பு
2024 நவம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தொழில் பரவாயில்லாமல் இருக்கிறது. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், சாலையோர தொழில், ஆன்லைன் தொழில் என அத்தனை பேருக்கும் உங்கள் துறைகளில் வருமானங்கள், சம்பாத்தியங்கள், ஏற்றங்கள், முன்னேற்றங்கள் இருக்கின்றன. பொருளாதார நிலைகளும் பரவாயில்லை. எந்த துறையில் பணியாற்றுபவராக இருந்தாலும் உங்கள் வேலையில் கொஞ்சம் பொறுமையாகவும், நிதானமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். செய்யும் வேலையை மனநிறைவோடு செய்ய முயற்சி செய்யுங்கள். அசையும், அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் உள்ளன. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் காத்திருங்கள். ஏனென்றால், உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம், உங்களுக்கு பிரயோஜனம் இல்லை என்ற நிலை இருப்பதால் உங்களின் பணம், பொருள் முடங்க வாய்ப்புள்ளது. அதனால், முதலீடு விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்புள்ளது. குழந்தைக்காக சிகிச்சை எடுத்தாலும் வெற்றி பெறும். தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. நண்பர்களால் மகிழ்ச்சி உண்டு. இந்த வாரம் முழுவதும், சிவன் கோயிலில் இருக்கக்கூடிய அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.