துணிந்து செயல்படுங்கள்

Update: 2024-12-02 18:30 GMT

2024 டிசம்பர் 03-ஆம் தேதி முதல் டிசம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உயர் கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் யோசித்து செய்யுங்கள். இதிலும் தடை என்பது இருக்கிறது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங்கில் முதலீடு செய்பவர்கள் கவனமாக செய்யுங்கள். லாபம் வருவதுபோன்று ஒரு தோற்றம். ஆனால், லாபம் பெரிதாக இல்லை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளது. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு தொண்டர்கள் மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது இருந்து கொண்டே இருக்கிறது. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், சாலையோர தொழில் என அத்தனை பேருக்கும் உங்கள் துறைகளில் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. நீங்கள் போடும் திட்டங்கள் வெற்றியடையும். எதிர்பார்க்கும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். இந்த வாரத்தில் துணிந்து சில முடிவுகளை எடுங்கள். நீங்கள் நினைப்பது அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். இந்த வாரம் முழுவதும், பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய தாயாரை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்