நினைப்பது நடக்கும்

Update: 2024-12-16 18:30 GMT

2024 டிசம்பர் 17-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தெய்வ அனுகூலம் கிடைக்கும். தெய்வ தரிசனம் அமையும். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில் செய்பவர்களுக்கு நன்றாக உள்ளது. காண்ட்ராக்ட், ரியல் எஸ்டேட், கமிஷன் தொடர்பான வேலைகள் போன்றவை செய்பவர்களுக்கு அவர்கள் தொழிலில் வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருக்கிறது. நீங்கள் நினைப்பது அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெறும். எதிர்பார்த்த, எதிர்பாராத செய்திகள் உங்களுக்கு நன்மையாக வந்து சேரும். முயற்சிகள் வெற்றியடையும். வேலை நன்றாக உள்ளது. அதனால், வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் வராத பணங்கள் வந்து சேரும். நண்பர்கள் உங்களை விட்டு பிரிந்து போவார்கள். மூத்த சகோதர - சகோதரிகளுக்காக செலவு செய்வீர்கள். இந்த வாரம் முழுவதும், சிவ வழிபாடு மிகவும் முக்கியம். எங்கெல்லாம் துர்க்கை இருக்கிறதோ துர்க்கையை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்