லாபம் கிடைக்கும்

Update: 2024-02-12 18:30 GMT

2024 பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். நீங்கள் எண்ணிய எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். உங்களுடைய பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு விற்பனை நன்றாக இருக்கும். கல்வியில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் அரசு, தனியார் என எந்த துறையில் நீங்கள் பணியாற்றினாலும் பெரிய அளவில் உங்கள் வேலையில் ஏற்றம், முன்னேற்றம் ஏற்படும். உடல் உழைப்பு மற்றும் மனம் சார்ந்த எல்லா விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். வழக்குகள் இருந்தால் ஜெயிப்பீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இதுவரை வராமல் இருக்கும் தொகை, அதாவது பணம் அனைத்தும் வந்து சேரும். மகாலட்சுமி மற்றும் அம்பாளை வழிபட்டால் மேலும் ஏற்றம் கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்