வேலையில் கவனம்

Update:2024-09-24 00:00 IST

2024 செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கிரக நிலைகள் சரியில்லாததால் உங்கள் பணம், பொருள் முடங்க வாய்ப்புள்ளது. பெரிய அளவில் பிசினஸ் செய்தால் சுமாராகத்தான் இருக்கும். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். இந்த வாரம் சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் மற்றும் டிரேடிங் செய்பவர்களுக்கு சுமாராகத்தான் இருக்கிறது. எல்லாமே லாபம் வருவது மாதிரியான தோற்றம். ஆனால் லாபம் இல்லை. உங்கள் காதல் விஷயங்கள் வெற்றியடையவும் வாய்ப்புகள் இல்லை. விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும். அதனால் உடல் ஆரோக்கியத்தில் பெரிய அளவில் கவனம் தேவை. இடம், வீடு, வீட்டு உபயோகப்பொருட்கள், வண்டி, வாகனம் வாங்க நினைப்பவர்கள் கொஞ்சம் காத்திருங்கள். இவை நடப்பதில் நிறைய தடைகள் இருக்கின்றன. கையில் பணம், தனம் இருந்தாலும் பிரயோஜனம் இல்லாத காலமாக இருக்கிறது. வேலையை பொறுத்தவரை கவனம் செலுத்துங்கள். சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்காது. அதனால், வேலையில், நிம்மதியற்ற சூழல்களும், திகுதியற்ற மனநிலையும் இருக்கிறது. வேலையில் டென்ஷன், அழுத்தம் அனைத்துமே இருக்கும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மை, நண்பர்களால் மகிழ்ச்சி ஆகியவை உண்டு. வாரம் முழுவதும் முருகன் மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.       

Tags:    

மேலும் செய்திகள்